பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

507

முன்நின்று விரும்புதற் குரிய1 சிவனுகர்வாகிய பயனைப் பகுந்து கொடுத்தருளி எளியேனை ஆட்கொண்டருளவல்லையோ? மிகப் பெரிதாகிய அண்டகோடிகளை யெல்லாம் பெறாது பெற்றெடுத்த இறைவியே, பெரிய கபிலைமாநகரில் வீற்றிருந்தருளும் பெரிய நாயகி அம்மையே;

     (வி - ம்.) மட்கரகம் - மண்கலயம். கடைகெட்ட - இழிவான. நவவாயில் - ஒன்பது தொளை (காது இரண்டு, கண்ணிரண்டு, மூக்கிரண்டு, வாய்ஒன்று, ஒன்றுக்கு இரண்டுக்குப் போகும் கருவாய் ஒன்று எருவாய் ஒன்று ஆக ஒன்பது)

     சிவபோகத்தை விளையவொட்டாமல் தடுத்து நிற்பது உலகியற் பற்றுக்கள். அப் பற்றுக்களைப் பைங்கூழாம் நெற்பயிருக்குண்டாம் களைகளைக் கட்டுவது போன்று திருவருளால் அகற்றுவதே களைகட்டலாம். களைகட்டல் - களைபிடுங்குதல். உலகியற்கையில் செல்லும் உள்ளப்பற்றற்றால் உடையவன் பற்று மேலோங்கிச் சிவபெருமான் திருவடியின்பாகத் திகழும். அவ்வுண்மை வருமாறு :

"எப்பொருள்வந் துற்றிடினும் அப்பொருளைப் பார்த்திங்
    கெய்துமுயிர் தனைக்கண்டிவ் வுயிர்க்கு மேலாம்
 ஒப்பிலருள் கண்டுசிவத் துண்மை கண்டு
    உற்றதெல்லாம் அதனாலே பற்றி நோக்கித்
 தப்பினைச்செய் வதுமதுவே நினைப்புமது தானே
    தருமுணர்வும் பொசிப்புமது தானே யாகும்
 எப்பொருளும் அசைவில்லை யென அந்தப் பொருளோ
    டியைவதுவே சிவயோகம் எனுமிறைவன் மொழியே"
- உண்மைநெறிவிளக்கம், 5.
(1)
தந்தைதாய் மகவுமனை வாழ்க்கை யாக்கை
    சகமனைத்தும் மவுனியருள் தழைத்த போதே
இந்திரசா லங்கனவு கானல் நீராய்
    இருந்ததுவே இவ்வியற்கை என்னே என்னே.
     (பொ - ள்.) உரையற்ற மவுனகுருவின் திருவருள் கைவந்து தழைத்தபோதே (உண்மையுணராமல்) நிலையான மெய்ப்பொருள்கள் என்று மனங்கொண்டு பற்றுச் செய்யப்பட்ட தந்தை தாய், மக்கள், மனைவி, வாழ்வு, உடம்பு 2 உலகம் ஆகிய பொருள்கள் அனைத்தும் கண்கட்டுவித்தை, கனவு கானல்நீர்போன்று தோன்றி மறையும் நிலையிலாப் பொருள்களாயிருந்தன, இவ்வியற்கையை என்னென்று கூறுவது? கண்கட்டு வித்தை - இந்திரசாலம்.

(1)
 
 1. 
'மெய்ம்மையாம்,' 4. 76 - 2.  
 2. 
'தந்தையார்.' 6. 93 - 10.