பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

524

     (வி - ம்.) கலநிறைபால் தன்னில் ஒருபுடை கண்ணல், நலமாமோ சொல்லாய் நயந்தென்பது போன்று அகல்நிறைவாகிய சிவன் நிறைவில் அடங்கும் நிறைவாகிய ஆருயிர் ஒரு புடையென்று சொல்லுதற்கியையுமோ? ஆகாயம் நிறையாத பொருளுண்டோ? ஆகாயத்தில் தண்கடல் ஒரு புடையாவதுண்டோ? அதுபோல் நிலமும் ஒரு புடையாவதுண்டோ? இவ்வனைத்தும் உருவமும் அருவமுமாக வுள்ளன; அதனால் இவ்வொப்பு இறைவனுக்கும் உயிர்க்கும் ஒரு புடையெனக்கொள்க.

(28)
புகலரிய நின்விளையாட் டென்னே எந்தாய்
    புன்மையறி வுடையஎன்னைப் பொருளாப் பண்ணி
இகல்விளைக்கும் மலமாயை கன்மத் தூடே
    இடருறவுஞ் செய்தனையே இரக்க மீதோ.
     (பொ - ள்.) சொல்லுதற்கரிய உன் திருவிளையாடல் எதுவோ? சிற்றறிவுடைய எளியேனைப் பொருளாகப்பண்ணிப் போர் விளைக்கும் பொல்லா மல மாயா கன்மங்களிடையே நீங்காத் துன்பம் அடையும்படி செய்தருளினையே? இதுவோ நின் பேரிரக்கம்?

     (வி - ம்.) பச்சிளம் பிள்ளையுடன் நச்சரவினை இரக்கமுள்ள நற்றாய் வைப்பளோ? நற்றாய் வைப்பின் அந் நச்சரவு அப் பிள்ளையினை அச்சுறுத்த வைப்பளேயன்றி கொன்றுவிட வையாள்1. அதுபோன்றதே இறைவன் செயலும்.

(29)
இரக்கமொடு பொறைஈதல் அறிவா சாரம்
    இல்லேன்நான் நல்லோர்கள் ஈட்டங் கண்டால்
கரக்குமியல் புடையேன்பாழ் நெஞ்சம் எந்தாய்
    கருந்தாதோ வல்லுருக்கோ கரிய கல்லோ.
     (பொ - ள்.) நல்லார்க்கு இயல்பாக அமையவேண்டிய மாறா இரக்கமும், மிக்க பொறையும், தக்க கொடையும், மெய்யுணர்வும் நல்லொழுக்கமும் சிறிதும் இல்லேன்; நல்லார்கள் எனப்படும் சிவனடியார் திருக்கூட்டத்தைக் காண நேர்ந்தால் ஒளிந்துகொள்ளும் இயல்புடையேன்; பயனில்லாத என் நெஞ்சம் கரிய இரும்போ? வன்மை மிக்க உருக்கோ, கருமை முற்றிய கல்லோ?

(30)
சீராருந் தெய்வத் திருவருளாம் பூமிமுதல்
பாராதி யாண்ட பதியே பராபரமே.
     (பொ - ள்.) சிறப்பு வாய்ந்த தெய்வத்தன்மை பொருந்திய திருவருள் வெளிமுதலாக நிலவுலக முடிவாக அனைத்தினையும் ஆண்டருள் புரியும் தலைவனே! மேலாம் தனிமுதற் பொருளே.

(1)
 
 1. 
'நாகத்தை.' 4. 53 - 2.