பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


672


அங்குமிங்கும் எங்குநிறை அற்புதனார் பொற்பறிந்து
பங்கயத்துள் வண்டாய்ப் பயன்பெறவா நல்லறிவே.
     (பொ - ள்) விண்ணிடத்தும், மண்ணிடத்தும், மற்றெவ்விடத்தும் நீக்கமறப் பெருநிறைவாக நிறைந்து நிற்கும் வியத்தகு சிவபெருமானாரின் திருவடிப் பேரின்பத் தேனைத் திருவருளால் நுகர, தாமரையின் தேனை வண்டுண்பது போன்று நல்லறிவே வருவாயாக.

(3)
கான்றசோ றென்னஇந்தக் காசினிவாழ் வத்தனையுந்
தோன்ற அருள்வெளியில் தோன்றவா நல்லறிவே.
     (பொ - ள்) இந் நிலவுலக வாழ்வுகள் அத்தனையும் கக்கிய சோறு போன்று உள்ளத்தே தோன்றும்படி திருச்சிற்றம்பலமென்னும் சிதாகாய வெளிதோன்ற நல்லறிவே வருவாயாக.

(4)
 
என்னரசே கேட்டிலையோ என்செயலோ ஏதுமிலை
தன்னரசு நாடாகித் தத்துவங்கூத் தாடியதே.
     (பொ - ள்) அடியேனுக்குரிய தலைவனே, இவ் வுடம்பின்கண் நின்று யான் செய்யும் செயலென்று சொல்லக்கூடியது ஒன்றுமில்லை. தத்துவங்கள் அனைத்தும் என்னுடலைத் தமக்கு இடமாக்கி அரசு நடத்தித் தம் நாடாகக்கொண்டு கூத்தாடுகின்றன. இதனை நீ கேட்டறிந்தாயில்லையே?

(1)
பண்டொருகால் நின்பாற் பழக்கமுண்டோ எந்தைநினைக்
கண்டொருகாற் போற்றக் கருத்துங் கருதியதே.
     (பொ - ள்) எந்தையே நின்திருவடியினைக் கண்டு ஒருகால் பூத்தூவிப் போற்றி வழிபட அடியேன் மனமும் ஏனைப் பொறிகளும் எண்ணின. அதனால் அவை முற்பிறப்பில் நின்திருவடி வழிபாட்டுப் பழக்கமுடையனவோ?1 (இல்லாவிட்டால் இவ்வெண்ணம் தோன்றுவதற்கில்லை.)

(2)
கண்டனவே காணுமன்றிக் காணாவோ காணாஎன்
கொண்டறிவேன் எந்தைநினைக் கூடுங் குறிப்பினையே.
     (பொ - ள்) மனமானது பண்டு கண்டு பழகிய பொருள்களையே அடுத்த பிறப்பிலும் காணும் தன்மையுடையது. காணாத பொருளைக் காணாது. அடியேன் நின்திருவடியினை அறியுங் குறிப்பினை எவ்வாறு அறிவேன்.

(3)
கல்லா லடியில்வளர் கற்பகமே என்னளவோ
பொல்லா வினைக்குப் பொருத்தந்தான் சொல்லாயோ.
 
 1. 
'என்ன புண்ணியம்.' 2. 106 - 1.