பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


676


திங்களமு தாநின் திருவாக்கை விட்டரசே
பொங்கு விடமனைய பொய்ந்நூல் புலம்புவனோ.
     (பொ - ள்) திங்களிடத்துக் காணப்படும் அமிழ்து போன்ற அரிய பெரிய திருமாமறை திருமாமுறைகளாம் நின் திருமொழியை விட்டுப் பிறப்பினைத் தருகின்ற விரிவிலா அறிவினார்கள் செய்த நஞ்சனைய நூல்களைக் கற்று வருந்திப் புலம்புவனோ?

(22)
உன்னஉன்ன என்னைஎடுத் துள்விழுங்கு நின்நிறைவை
இன்னமின்னங் காணாமல் எந்தாய் சுழல்வேனோ.
     (பொ - ள்) எந்தையே! திருவருளை முன்னிட்டு நின்திருவடியினை உள்குதலாகிய தியானத்தினை இடையறாது செய்துவர நின்முழு நிறைவின்கண் திருவருளால் அடியேனை ஒடுங்கச் செய்வதாகிய விழுங்குதலை இன்னமின்னங் காணாமல் எளியேன் சுழல்வேனோ?

(23)
ஆரா அமுதனைய ஆனந்த வாரிஎன்பால்
தாராமல் ஐயாநீ தள்ளிவிட வந்ததென்னோ.
     (பொ - ள்) ஐயனே! உண்ண உண்ணத் தெவிட்டாத அமிழ்தனைய நின்திருவடிப் பேரின்பப் பெருங்கடலினை எளியேனுக்கு அளித்தருளாமல் திருவருளுக்கு வேறாக அடியேனைத் தள்ளிவிடுதற்கு நேரிட்ட காரணம் யாதோ?

(24)
 
நின்றநிலை யேநிலையா வைத்தா னந்த
    நிலைதானே நிருவிகற்ப நிலையு மாகி
என்றுமழி யாதஇன்ப வெள்ளந் தேக்கி
    இருக்கஎனைத் தொடர்ந்துதொடர்ந் திழுக்கு மந்தோ.
     (பொ - ள்) திருவருளை முன்னிட்டு அடியேன் நின்றநிலையே நன்னெறி நிலையாக வைத்து, அந்நிலை தானே நிருவிகற்ப சமாதி நிலையுமாகி, என்றும் அழியாத திருவடிப் பேரின்பப் பெருவெள்ளந் தேக்கி இருக்க எளியேனை அடுத்தடுத்துப் பற்றியிழுக்கின்றது. நன்னெறி - சன்மார்க்கம். நிருவிகற்ப சமாதி - வேறுபாடில்லாதவொடுக்கம்.

(1)
இருக்காதி மறைமுடிவுஞ் சிவாகம மாதி
    இதயமுங்கை காட்டெனவே இதயத் துள்ளே
ஒருக்காலே யுணர்ந்தவர்கட் கெக்கா லுந்தான்
    ஒழியாத இன்பவெள்ளம் உலவா நிற்கும்.
     (பொ - ள்) மந்திரங்களைத் தன்னகத்தேயுடைய மறைகளின் முடிவும், சிவ வழிபாட்டினைத் தன்னகத்தேயுடைய சிவாகம முதலியவற்றின்