பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


677


     உள்ளுறைக் கருத்தும் அறிவடையாளத் திருக்கைக் காட்டெனவே திருவருளால் ஒருமுறை தங்கள் உள்ளத்தின்கண் தெளிந்த நல்லார்தமக்கு எப்போதும் நீங்காத சிவப்பேரின்பப் பெருக்கு விளையாநிற்கும்.

(2)
கற்றதுங்கேட் டதுந்தானே ஏதுக் காகக்
    கடபடமென் றுருட்டுதற்கோ கல்லால் எம்மான்
குற்றமறக் கைகாட்டுங் கருத்தைக் கண்டு
    குணங்குறியற் றின்பநிட்டை கூட அன்றோ.
     (பொ - ள்) மெய்யுணர்வு நூல்களாகிய ஞான நூல்களைக் கற்றலும் நல்லார் வாயிலாகத் தெளியக் கேட்டலும் எதன் பொருட்டென்று நன்கு ஆயின் (ஆருயிர்களின் உய்வின் பொருட்டேயாம்) பிறரொடு சொற்போராகிய கடம், படம் என்று உருட்டும் தர்க்கம் புரிவதற்கோ? கல்லாலின் நீழலில் எழுந்தருளும் எம்மான் ஆணவமலக் குற்றமும் அதனால் வரும் இருவினையும் வினையாலேற்படும் பிறப்பும், பிறப்பின் நிலைக்களமாகிய மாயையும் அறவே நீங்கும் பொருட்டு அறிவடையாளம் எனப்படும் சின்முத்திரை வடிவமாகத் திருக்கை காட்டியருளினன். திருவருளால் அத் திருக்குறிப்பினை யுணர்ந்து மாயாகாரியக் குணங்குறிகள் நீங்கிய சிவத்தொடுங் கூடியொடுங்கும் சிவயோக நிட்டையினைப் பெற்று இன்புறுதற்கன்றோ?

(3)
 
பாடுகின்ற பனுவலோர்கள், தேடுகின்ற செல்வமே
நாடுகின்ற ஞானமன்றில், ஆடுகின்ற அழகனே.
     (பொ - ள்) மெய்யுணர்வு நூலுணர்ச்சி திருவருளால் கைவரப் பெற்றோர், வாயாரப் பன்னிய நற்றமிழ்மாலை பாடி வழிபடும் பண்பினராவர். அங்ஙனம் பாடித் தேடுகின்ற திருவருட் செல்வமே, எத்தகைய மூதறிவினராகிய ஞானியரும் தேடியடைகின்ற தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண்ணும் பெருந்திருத்தொழிற் கூத்தினை ஆடியருளும் அழகனே.

(1)
அத்தனென்ற நின்னையே, பத்திசெய்து பனுவலால்
பித்தனின்று பேசவே, வைத்ததென்ன வாரமே.
     (பொ - ள்) எண்ணில்லாத ஆருயிர்கள் அனைத்திற்கும் திண்ணமாக நுண்ணிய தந்தையே, நின்னையே அடியேன் சிவபத்தி செய்து நூல்களாற் புகழ்ந்து பாடும்படி பித்தனாக்கி எளியேனை வைத்தருளியதற்குக் காரணம் யாது? (அன்பின் மிகுதியோ அறிகிலேன்.)

(2)
சிந்தையன்பு சேரவே, நைந்துநின்னை நாடினேன்
வந்துவந்து னின்பமே, தந்திரங்கு தாணுவே.
     (பொ - ள்) அடியேன் மனத்தின்கண் பேராப் பேரன்பு நாளும் பெருக, அதனால் உள்ளம் உருகி உன்னை விரும்பினேன். சிவனே