எண்ணிய எண்ணமெல் லாந்தெரிந் தெனக்குத் 230தண்ணருள் செய்தவன் தாயு மானவன் ஒருமொழி பகர்ந்த உதவியா லவன்றன் இருபத முப்போ திறைஞ்சிவாழ்த் துவனே. அருள்வாக்கிய அகவல் முற்றிற்று. அருளையவடிகள் பாடியது. உலகினுக் கணியா மிராமநா தபுரத் துயர்நறை வாவியின் குணபால்மலர்நிறை வனத்திற் சிவத்துறு நிட்டை மருவிமெய் யொருவிவே தாந்தத்திலகிய பொருளால் வானமாய் நிறைவு மெந்தையே எனதுபந் தமும்போய்நிலையுற நினது திருவரு ளளிப்பாய் நின்மலா னந்தமே போற்றி. கோடிக்கரை ஞானிகள் பாடியது.துகளறு சாலி வருடமா யிரத்தைஞ் ஞற்றொடெண் பத்தொன்று தொடருமிகுசுப கிருதாம் வருடந்தை மாதம் வெண்மதி வாரநாள் விசாகமகிமைசேர் பூரணத் திதியினி லருத்த மண்டல சமையத்திற் கங்கைதிகழ்கரை யதனிற் றாயுமா னவனார் சிவத்தினிற் கலந்தநற் றினமே.
எண்ணிய எண்ணமெல் லாந்தெரிந் தெனக்குத் 230தண்ணருள் செய்தவன் தாயு மானவன் ஒருமொழி பகர்ந்த உதவியா லவன்றன் இருபத முப்போ திறைஞ்சிவாழ்த் துவனே.
உலகினுக் கணியா மிராமநா தபுரத் துயர்நறை வாவியின் குணபால்மலர்நிறை வனத்திற் சிவத்துறு நிட்டை மருவிமெய் யொருவிவே தாந்தத்திலகிய பொருளால் வானமாய் நிறைவு மெந்தையே எனதுபந் தமும்போய்நிலையுற நினது திருவரு ளளிப்பாய் நின்மலா னந்தமே போற்றி.
துகளறு சாலி வருடமா யிரத்தைஞ் ஞற்றொடெண் பத்தொன்று தொடருமிகுசுப கிருதாம் வருடந்தை மாதம் வெண்மதி வாரநாள் விசாகமகிமைசேர் பூரணத் திதியினி லருத்த மண்டல சமையத்திற் கங்கைதிகழ்கரை யதனிற் றாயுமா னவனார் சிவத்தினிற் கலந்தநற் றினமே.