பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


89


மெய்யென்று சொல்லப்படும் தத்துவங்கள் முப்பத்தாறும் :

பூதம் - நிலம், நீர், நெருப்பு, உயிர் (காற்று), விசும்பு - 5
தன்மாத்திரை - நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை 5
அறிதற்பொறி - மூக்கு, வாய், கண், மெய், செவி - 5
செய்தற்பொறி - கருவாய், எருவாய், கை, கால், வாய் - 5
அகக்கருவி - மனம், ஆங்காரம், புத்தி, குணம் - 4
    இவ்விருபத்துநான்கும் உடல்மெய் என்ப. உடல்மெய் யெனினும் ஆன்ம தத்துவம் எனினும் ஒன்றே. (உணரப்படுந்துணை) போர்வை - (காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை: ) ஊழி, ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, ஆள், மருள் ஆகிய இவ்வேழும் உணர்தற்கு உறுந்துணை மெய்கள் (உணர்வுத்துணை). இவற்றை வித்தியா தத்துவமென்ப. உணர்த்து மெய்கள் - அத்தன், அன்னை, அருளோன், ஆண்டான், ஆசான்: (சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை) என ஐந்தாம். இவ்வைந்தும் சிவதத்துவம் எனப்படும். இவ்வுண்மை வருமாறுணர்க :

"ஆகின்ற தொண்ணூறோ டாறும் பொதுஎன்பர்
 ஆகின்ற ஆறா றருஞ்சைவர் தத்துவம்
 ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்
 காகின்ற நாலாறை யைந்துமாயா வாதிக்கே."
- 10. 2139.
    'அறியாமை அறிவகற்று' மெய்ம்மை வருமாறு :

"அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே
    அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து
 குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும்
    கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயிற்
 பிரியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப்
    பிரபஞ்ச பேதமெல்லாந் தானாய்த் தோன்றி
 நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி
    நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதாரன் ஆயே."
- சிவஞானசித்தியார், 8. 2 - 20.
    'அறியாமை அறிவாதி பிரிவாக' என்பதற்குப் புலம்பாகிய கேவலத்திலும், புணர்வாகிய சகலத்தினும் கூடாமலென்பது மொன்று அறியாமையினைத் தூவா மெய்யெனவும், அறிவினைத் தூமெய் எனவுங் கூறுப.

    'சிந்தையற' நிற்குமுண்மை வருமாறு :