பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


99


"தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
 தன்நெஞ்சே தன்னைச் சுடும்."
- திருக்குறள், 293.
    திருவருட்சார்பினர் திறம் வருமாறு :

"அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
 இன்னா உலகம் புகல்."
- திருக்குறள், 243.
    முற்றுமுணர்தல் - சர்வஞ்ஞத்துவம். முடிவிலாற்றலுடைமை - அனந்தசத்தி; அளவிலாற்றலுடைமை.

    மெய்யுணர்ந்தாரின் மலவிருளைத் திருவருள் ஒளியால் தீர்த்தருள்வன் சிவன் என்பதனை வருமாறுணர்க :

"அருளது சத்தி யாகும் அரன்தனக் கருளை யின்றித்
 தெருள்சிவம் இல்லை அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை1
 மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்
 கிருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல2 ஈசன்."
- சிவஞானசித்தியார், 5. 2 - .
"தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தருஞ்சத்தி
 பின்னமிலான் எங்கள் பிரான்."
- திருவருட்பயன் - 2.
(6)
கானகம் இலங்குபுலி பசுவொடு குலாவும்நின்
    கண்காண மதயானைநீ
  கைகாட்ட வுங்கையால் நெகிடிக் கெனப்பெரிய
    கட்டைமிக ஏந்திவருமே
போனகம் அமைந்ததென அக்காம தேனுநின்
    பொன்னடியில் நின்றுசொலுமே
  புவிராசர் கவிராசர் தவராச ரென்றுனைப்
    போற்றிசய போற்றிஎன்பார்
ஞானகரு ணாகர முகங்கண்ட போதிலே
    நவநாத சித்தர்களும்உன்
  நட்பினை விரும்புவார் சுகர்வாம தேவர்முதல்
    ஞானிகளும் உனைமெச்சுவார்
வானகமும் மண்ணகமும் வந்தெதிர் வணங்கிடும்உன்
    மகிமையது சொல்லஎளிதோ
  மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுரு வேமூலன்
    மரபில்வரு மௌனகுருவே.
 1. 
'அருளுண்டாம்.' சிவஞானபோதம், 5. 2 - 3 
 2. 
'இங்கிதன்.' 12. பாயிரம் - 40.