135
(வி - ம்) கண்ணகன் - இடம் அகன்ற; இடம் பெரிதாகிய. காலூன்றி - நிலைபெற்று நின்று. பதி - உயிர்நிலைக்களம் : உடம்பு. பவுரி - ஒருவகைக் கூத்து. கௌரி - பொன்னிறம் வாய்ந்த அம்மை. பண்ணவி - இறைவி. யாப்புறவு - நியமம். மக்கட்பிறப்பின் மாண்பு வருமாறு :"பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணார் பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.- 10. 2052."அண்டசஞ் சுவேத சங்கள் உற்பிச்சஞ் சராயுத்தோ டெண்தரு நாலெண் பத்து நான்குநூ றாயிரத்தாய்1 உண்டுபல் யோனி யெல்லாம் ஒழித்துமா னுடத்து2 தித்தல் கண்டிடிற் கடலைக் கையால் நீந்தினன் காரி யங்காண்." - சிவஞானசித்தியார், 2. 4 - 17. இப் பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என யாவரும் அஞ்சு முண்மை வருமாறு:"துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன்3கொ லோவென் றன்னுள்ளங் கிடந்து மறுகிடுமே."- 4. 7 - 8. குண்டலி சத்தி: மூலத்திடத்துப் பாம்பு வடிவா யிருப்பதோர் ஆற்றல். (4)பொய்திகழும் உலகநடை என்சொல்கேன் என்சொல்கேன் பொழுதுபோக் கேதென்னிலோ பொய்யுடல் நிமித்தம் புசிப்புக் கலைந்திடல் புசித்தபின் கண்ணுறங்கல்கைதவ மலாமலிது செய்தவம தல்லவே கண்கெட்ட பேர்க்கும்வெளியாய்க் கண்டதிது விண்டிதைக் கண்டித்து நிற்றலெக் காலமோ அதையறிகிலேன் 1. 'உரைசேரு'. 1. 132 - 4. 2. 'மானுடப்'. சிவஞானசித்தியார், 2. 4 - 20. 3. 'புழுவாய்ப்பிறக்கினும்'. 4. 95 - 8.
"பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேணார் பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.- 10. 2052.
"அண்டசஞ் சுவேத சங்கள் உற்பிச்சஞ் சராயுத்தோ டெண்தரு நாலெண் பத்து நான்குநூ றாயிரத்தாய்1 உண்டுபல் யோனி யெல்லாம் ஒழித்துமா னுடத்து2 தித்தல் கண்டிடிற் கடலைக் கையால் நீந்தினன் காரி யங்காண்." - சிவஞானசித்தியார், 2. 4 - 17.
"துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன்3கொ லோவென் றன்னுள்ளங் கிடந்து மறுகிடுமே."- 4. 7 - 8.
பொய்திகழும் உலகநடை என்சொல்கேன் என்சொல்கேன் பொழுதுபோக் கேதென்னிலோ பொய்யுடல் நிமித்தம் புசிப்புக் கலைந்திடல் புசித்தபின் கண்ணுறங்கல்கைதவ மலாமலிது செய்தவம தல்லவே கண்கெட்ட பேர்க்கும்வெளியாய்க் கண்டதிது விண்டிதைக் கண்டித்து நிற்றலெக் காலமோ அதையறிகிலேன்