வானாதி பூதமாய் அகிலாண்ட கோடியாய் | மலையாகி வளைகடலுமாய் | மதியாகி இரவியாய் மற்றுள எலாமாகி | வான்கருணை வெள்ளமாகி | நானாகி நின்றவனு நீயாகி நின்றிடவு | நானென்ப தற்றிடாதே | நான்நான் எனக்குளறி நானா விகாரியாய் | நானறிந் தறியாமையாய்ப் | போனால் அதிட்டவலி வெல்லஎளி தோபகல் | பொழுதுபுகு முன்கண்மூடிப் | பொய்த்துகில்கொள் வான்தனை எழுப்பவச மோஇனிப் | போதிப்ப தெந்தநெறியை | ஆனாலும் என்கொடுமை அநியாயம் அநியாயம் | ஆர்பால் எடுத்துமொழிவேன் | அண்டபகி ரண்டமும் அடங்கவொரு நிறைவாகி | ஆனந்த மானபரமே. |