பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

168
முடைநாற்றம் வீசுகின்ற சிறு வீடாகிய இவ்வுடம்பை (உண்மை தெரிந்தார் எவரும் விரும்புவதற்கு மாறாக) அருவருப்பர். அது பொய்யல்லவே?

     "இதனை . . . வேண்டிலேன்" - (இத்தகைய இழிவான நிலையில்லாத, இவ்வுடம்பினை மெய்யென்று நம்பி அடியேன் அறிவுசெல்லுமோ? பயனற்று வீணிலே துன்பமாய் அலையவோ? நிலையில்லாத இவ்வுலக வாழ்வைக் கனவிலுங்கூடச் சிறிதும் விரும்புதல் செய்யேன்;

         "சுத்தநிர்க் . . . .சுகவாரியே" -

     (வி - ம்.) இரங்கியே - வருந்தியே. அமிர்த சஞ்சீவி - உயிர் கொடுக்கும் மருந்து புன்மை - தாழ்வு. மொய்த்திடும் - நிறைந்திடும். புலை - புலால்; முடை. பாழ் - பயனற்றது; வீண். சொப்பனம் - கனவு. குடில் - சிறு வீடு. அருவருப்பு - வெறுப்பு. புந்தி - புத்தி; பகுத்தறிவு.

     உடம்பு எழுவகை முதற்பொருள்களால் ஆக்கப்பட்டது. அவை வருமாறு: 1. சாரம், 2. செந்நீர், 3. ஊன், 4. கொழுப்பு, 5. எலும்பு, 6. மூளை, 7. வெண்ணீர்.

     ஆண்டவன் அன்பு தோன்றவேண்டுமென்ற நினைவு ஒரோ வழித் தோன்றியதும் ஆண்டவன் ஆட்கொண்டருளுகின்றனன். இவ்வுண்மை வருமாறு :

"அன்ப ராகிமற் றருந்தவ முயல்வார்
    அயனு மாலுமற் றழலுறு மெழுகாம்
 எண்ப ராய்நினை வாரெ னைப்பலர்
    நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
 வன்ப ராய்முரு டொக்குமென் சிந்தை
    மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
 தென்ப ராய்த்துறை யாய்சிவ லோகா
    திருப்பெ ருந்துறை மேவிய சிவனே."
- 8. செத்திலாப்பத்து. 4.
     உடம்பின் அமைப்பினை வருமாறுணர்க :

"நிணக்குடர் தோனரம் பென்புசே ராக்கை1 தா னிலாயதன்றால்
 குணங்களார்க் கல்லது குற்றநீங் காதெனக் குலுங்கினாயே
 வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனங்கொடேத்தும்
 அணங்கனா ரூர்தொழுதுய்யலா மையல்கொண் டஞ்சல்நெஞ்சே."
- 2. 71 - 3.
     கட்டுறு வாழ்வின் நிலையாமை உணர்ந்தாலன்றி ஒட்டுறு வாழ்வின் நிலைப்புணர்ச்சி தோன்றாது: இவ்வுண்மை வருமாறுணர்க :

 
 1. 
'கால்கொடுத்.' 4. 33 - 4.