அண்டமுடி தன்னிலோ பகிரண்ட மதனிலோ | அலரிமண டலநடுவிலோ | அனல்நடுவி லோஅமிர்த மதிநடுவி லோஅன்பர் | அகமுருகி மலர்கள்தூவித் | தெண்டமிட வருமூர்த்தி நிலையிலோ திக்குத் | திகந்தத்தி லோவெளியிலோ | திகழ்விந்து நாதநிலை தன்னிலோ வேதாந்த | சித்தாந்த நிலைதன்னிலோ | கண்டபல பொருளிலோ காணாத நிலையெனக் | கண்டசூ னியமதனிலோ | காலமொரு மூன்றிலோ பிறவிநிலை தன்னிலோ | கருவிகர ணங்களோய்ந்த | தொண்டர்க ளிடத்திலோ நீவீற் றிருப்பது | தொழும்பனேற் குளவுபுகலாய் | சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ் | சோதியே சுகவாரியே. |