பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

241
மாக இந்த்ரதனு மின்னை யொத்திலக
  வேதம் ஓதியகு லாலனார்
    வனைய வெய்யதடி கார னானயமன்
  வந்த டிக்குமொரு மட்கலத்
தேக மானபொயை மெய்யெ னக்கருதி
  ஐய வையமிசை வாடவோ
    தெரிவ தற்கரிய பிரம மேஅமல
  சிற்சு கோதய விலாசமே.
     (பொ - ள்) "காக . . . பெட்டியை" - காகங்களுடன், கழுகுகளும், பேய்களும், நாய்களும், நரிகளும் (தத்தமக்குரிய இரையென்று ஆவி நீங்கிய உடம்பினைச்) சூழ்ந்து வருவதற் கேதுவாய சோற்றாலடைக்கப்பட்ட தோலாலாகிய துருத்தியை, இரண்டு கால்களையும், ஒன்பது வாயில்களையும் பெற்று வளர்ந்து அமைந்துள்ள காமவேளாகிய மன்மதன் (தன்மனம் போல்) கூத்தாடும் இடமாகிய நாடகசாலையை, மயக்கமும் தீராஆசையும் (தங்கட்கு உரிமையாக்கி அடிமையென எழுதிவாங்கியுள்ள) முறிச் சீட்டாகிய ஆவணத்தைக் காவல் பெற வைத்துள்ள வைப்புப் பெட்டியை;

     "மும்மலமி . . . வனைய" - (ஆணவம் கன்மம் மாயை ஆகிய) மூன்று மலங்களும் பெருக்கெடுத்து வழிந்தோடும் கிணற்றை, கொடிய (பொல்லாங்கு செய்) புழுக்கள் விடாது ஊர்ந்து நெளிந்து செல்லும் நரகத்தையொத்த மலச்சேற்றை, குற்றமுள்ள கட்டுக்கடைச் சரக்கை, வானத்தில் காணப்படுகின்ற இந்திரவில்லையும், மின்னலையும் ஒத்து விளங்கும்படியாக மறைகளைப் படித்த நான்முகனாராகிய குயவனார் உண்டுபண்ண;

     "வெய்யதடி . . . வாடவோ" - கூற்றுவனாகிய கொடிய தடிக்காரன் (வெகுண்டு) வந்து உடைத்தொழிக்கின்ற ஒரு மட்கலம் போன்ற இவ்வுடம்பாகிய (நிலையில்லதென்று சொல்லப்படும்) பொய்ப்பொருளை, (நிலையுள்ளதென்று சொல்லப்படும்) மெய்ப்பொருளென்று நினைத்து, முதல்வனே; இந்நிலவுலகின்மீது வாடிவருந்தி அடியேன் துன்புற்று நிற்கவோ?

     "தெரிவ . . . விலாசமே" - (சுட்டுணர்வாலும் சிற்றுணர்வாலும்) அறிதற்கரிய பெரும் பொருளே! இயல்பாகவே பாசங்களில்லாத, அறிவின்ப ஊற்றுத் தோன்றும் அருள் உறையுளே!

     (வி - ம்.) அலகை - பேய். முறி - சீட்டு; அடிமைஆவணம். கேணி - கிணறு. கிருமி - புழு. கும்பி - நரகம். முடங்கல் - குற்றம். மாகம் - வானம். குலாலனார் - குயவனார். வனைய - உண்டுபண்ண. வையம் - உலகம். பிரமம் - பெரும்பொருள்.

     உடம்பின் இயல்பை வருமாறுணர்க :

     "காக்கை" (பக்கம் 13) பூக்கைக் (பக்கம் 59) என்று வரும் திருமாமுறைத் திருப்பாட்டுகளிற் காண்க.

(1)