"தெரிவ . . . விலாசமே" -
(வி - ம்.) நிட்டை - அழுந்தியறியும் அனுபவநிலை.
மிக்க செல்வம் பேரல்லலைத் தருவது என்பது வருமாறு :
| 'செல்வமென்னும் அல்லலிற் பிழைத்தும்." | | - 8. போற்றித் - 39. |
| "ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக் | | காத்தலும் ஆங்கே கடுந் துன்பம்-காத்தல் | | குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக் | | குறைபதி மற்றைப் பொருள்." | | - நாலடியார், 280. |
| "ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும் | | கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும் | | ஒட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக் | | காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே." | | - 10 - 215. |
| "ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் | | தோற்றம் நிலக்குப் பொறை." | | - திருக்குறள் - 1003. |
| "வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித் | | தாழ்வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரும் | | ஊழ்பெறல் அரிது சால உயர்சிவ ஞானத் தாலே | | போழிள மதியி னானைப் போற்றுவார் அருள்பெற் றாரே." | | - சிவஞானசித்தியார், 2. 4 - 19. |
ஈத்துவக்கும1 இன்ப அறிவுடையார் செய்வது வருமாறு :
| "விண்பொயத னான்மழைவி ழாதொழியி | | னும்விளைவு தான் மிகவுடை | | மண்பொயத னால்வளமி காதொழியி | | னுந்தமது வண்மை வழுவார் | | உண்பகர வாருலகி னூழிபல | | தோறுநிலை யானபதி தான் | | சண்பைநக ரீசனடி தாழுமடி | | யார்தமது தன்மை யதுவே." | | -3. 75 - 7. |
(7) 1. | 'நன்மையராம்'. 2. 42 - 9. | |