அனந்தபத உயிர்கள்தொறும் உயிரா யென்றும் | ஆனந்த நிலையாகி அளவைக் கெட்டாத் | தனந்தனிச்சின் மாத்திரமாய்க் கீழ்மேல் காட்டாச் | சதசத்தாய் அருட்கோயில் தழைத்த தேவே | இனம்பிரிந்த மான்போல்நான் இடையா வண்ணம் | இன்பமுற அன்பர்பக்க லிருத்தி வைத்துக் | கனந்தருமா கனமேதண் அருளில் தானே | கனிபலித்த ஆனந்தக் கட்டிப் பேறே. |