| "உரையா னதுமை யலினால் உலகாம் |
| புரையோ ருணரும் பொருள்பொய் யிதனை |
| விரையா துணரும் அதுவீ டெனவே |
| வரையா துரைவா திவகுத் தனனே." |
| - சிவஞானசித்தியார், பரபக்கம், 208 |
6. "விந்துமயமென்பர்" விந்துவினின்று நாதமெய்களும் செவியோசையாகிய வைகரிமுதலிய ஓசைகள் நான்கும், அவ்விந்துவின் கீழ்ப்பட்ட மோகினி யென்று சொல்லப்படும் தூவாமாயையும் அத் தூவாமாயையினின்றும் பாரிய திரிபாய்த் தோன்று மூலப் பகுதியும், குணமுதலிய மெய்களும் ஆகியவற்றிற் கெல்லாம் விந்துவாகிய தூமாயை காரணமாயிருப்பதால் விந்துவே முதல் என்பர். இவ்வுண்மை வருமாறு காண்க:
| "விந்துவின் மாயை யாகி மாயையின் அவ்வி யத்தம் |
| வந்திடும் விந்துத் தன்பால் வைகரி யாதி மாயை |
| முந்திடும் அராகம் ஆதி முக்குணம் ஆதி மூலந் |
| தந்திடுஞ் சிவன வன்றன் சந்நிதி தன்னின் நின்றே." |
| - சிவஞானசித்தியார், 1. 1. 19. |
7. "நாமென்பர்" - அகம்பிரமமாய் அனுபூதியாகிய இன்ப நுகர்வும் தன்னிற்றானேயாய்க் காய மென்றும், கரணமென்றும், வாயு வென்றும் ஒரு வேறுபாடுமின்றி, இன்னபடி யென்று சொல்லுதற் கொரு சொல்லுமின்றி, வான முதலிய பூதங்கள் கெடவும், தான் ஒரு காலுங் கெடாதே நிலைபெற்று நின்று நான் பிரம மென்னும் ஞானமே முதலென்பர் ஏகான்மவாதிகள். அன்றியும் அவர்கள் மாசின்றியிருக்கும் வானத்தினை மேகமறைத்த தன்மைபோன்று தூய்மையாயிருக்கின்ற பெரும் பொருளாகிய பரப்பிரமமும் மாயையின் தடைகளால் தடைப்படுத்தப்பட்டிருந்த உடலிலே மயங்கி நிற்கிறதே அம் மேகத்தினை நீக்கின தன்மை போன்று ஆன்மாவினிடத்திலே ஒரு பகுத்தறியும் உணர்வு தோன்றி அந்த மாயையின் மறைப்பினை நீக்க நாமே என்கிற நிலையே 'நட்ட நடுவேயிருந்த நாமென்பர் சிலர்' என்பதாம். இவ்வுண்மை வருமாறு காண்க:
| "தானே தானாய் அனுபோகம் தன்னில் தன்னை அனுபவித்திட் |
| டூனே யுயிரே உணர்வேயென் றொன்று மின்றி உரையிறந்து |
| வானே முதலாம் பூதங்கள் மாய மாயா தேமன்னி |
| நானே பிரமம் எனத்தெளியும் ஞானம் பிரம ஞானமே." |
| - சிவஞானசித்தியார், பரபக்கம் - 233 |
8. "உருவமா மென்பர்சிலர்" - வேட்டுவாளியானது ஒன்றுமறியாத பச்சைப் புழுவை யெடுத்துத் தன்வடிவமாக்கின தன்மைபோலே ஒன்றுமறியாத ஆன்மாவையும் முதல்வனுடைய அருள் எடுத்துக் கொண்டு தன்வடிவமாக்க அந்த மாயாவுடல் தானே அழிவின்மை யைப்பெற்று