கருணைமொழி சிறிதில்லேன் ஈத லில்லேன் | கண்ணீர்கம் பலையென்றன் கருத்துக் கேற்க | ஒருபொழுதும் பெற்றறியேன் என்னை யாளும் | ஒருவாவுன் அடிமைநான் ஒருத்த னுக்கோ | இருவினையும் முக்குணமுங் கரணம் நான்கும் | இடர்செயுமைம் புலனுங்கா மாதி யாறும் | வரவரவும் ஏழைக்கோ ரெட்ட தான | மதத்தொடும்வந் தெதிர்த்தநவ வடிவ மன்றே. |