பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

36

அழிந்துவிடாது காத்துவருவதால் காத்தலாகவும் நீரூழிக் காலத்துக் கடல் பொங்கி, எல்லை கடந்து, உலகத்தை அழித்துவிடுதலால் அழித்தலாகவுங் கொண்டு மூன்று தன்மைகளையுடைய தொழிலுடையதென்றலும் ஒன்று.

     'ஆலாலம்' கண்டாரைக் கொல்லும் நஞ்சு. இந்நஞ்சு வானவரும் தானவரும் திருமால் தலைமையில் சாவா மருந்தினை எடுத்தல் வேண்டித் திருப்பாற்கடலைக் கடைந்தனர். திருவருளை முன்னிடாமையாகிய பெருங்குற்றத்தால் அருநஞ்சு தோன்றிற்று. சிவபெருமானிடம் சென்று தாங்கள் பொன்றாதிருக்கும்படி காத்தருளவேண்டி முறையிட்டனர். சிவபெருமான் அந்நஞ்சினை உட்கொண்டு கண்டத்தி லடக்கி யருளினன். அதனால் தேவர்களெல்லாம் உய்ந்தனர்.

     அக்கண்டம் திருநீலகண்டம் எனப் போற்றுப்படுகின்றது. அஃது அப் பெரியோனுக்கு அழகு செய்ததெனச் சங்கச்சான்றோரும் கூறுகின்றனர்; அது வருமாறு:

"கண்ணி கார்நறுங் கொன்றை . . .
 கறைமிட றணியலும் அணிந்தன் றக்கறை
 மறைநவி லந்தணர் நுவலவும் படுமே"
- புறம். கடவுள் வாழ்த்து.
     நஞ்சு கண்டாரைக் கொல்லுந் தன்மையதை வருமாறுணர்க :

"வீண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
    விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
 கண்டாரைக் கொலுநஞ்1 சுண்டாய் நீயே
    காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
 தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே
    தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
 திண்டோள்விட் டெரியாட லுகந்தாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ."
- 6. 38 - 10.
     சிவபெருமான் ஒருவனே பிறவா இறவாச் சிறப்பினையுடைய பெரியோன் என்பதும், ஏனைப் புல் முதலாகத் தேவர் ஈறாகச் சொல்லப்பட்ட யாக்கை வேறுபாட்டால் காணப்படுவன அனைத்தும் உயிரினங்களே என்பதும், அவை வினைக்கீடாகப் பிறப்பு இறப்புக் கட்குட்பட்டு இன்னலுறுவன என்பதும், இந் நஞ்சொன்றினாலேயும் உணர்ந்து கொள்ளலாம். அவ்வுண்மை வருமாறு காண்க:

"வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை
    விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி
 ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் தன்னை
    யோதாதே வேத முணர்ந்தான்தன்னை
 
 1. 
துஞ்சிருளாடுவர். 3. 102. 4.