பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

367
தானே படைத்திங் கென்னபலன்
    தன்னைப் படைத்தா யுன்கருத்தை
நானே தென்றிங் கறியேனே
    நம்பி னேன்கண் டருள்வாயே.
    (பொருள்) வான முதலாகச் சொல்லப்படுகின்ற மாயாகாரியமாகிய ஐம்பெரும் பூதங்களையும் கண்ணுதலால் படைத்துக் காத்து ஒடுக்கவல்ல முதல்வனே! அடியேனைக் காத்தருளும் வழியினைத் திருவுளங்கொண்டாயில்லை. கொடியவனாகிய எளியேனைப் படைத்திங்கு என்னபயனைப் பெற்றுக்கொண்டாய்? உன்திருவுள்ளத்தை எளியேன் என்வாறிருக்கு மென்று உணர்ந்திலேன். எனினும், உன்னையே முழுவதும் நம்பினேன்; திருவுள்ளங் கொண்டருள்வாயாக.

(8)
கண்டார் கண்ட காட்சியும்நீ
    காணார் காணாக் கள்வனுநீ
பண்டா ருயிர்நீ யாக்கையுநீ
    பலவாஞ் சமயப் பகுதியும்நீ
எண்தோள் முக்கட் செம்மேனி
    எந்தாய் நினக்கே எவ்வாறு
தொண்டாய்ப் பணிவா ரவர்பணிநீ
    சூட்டிக் கொள்வ தெவ்வாறே.
    (பொ - ள்.)நின் திருவருளால் மெய்யுணர்வு பெற்று மெய்ப் பொருள் கண்டார் அகம்புறமாகக் காணப்படும் காட்சிப் பொருளும் நீ. மெய்ப்பொருள் காணாதார்க்கு வெளிப்பட்டருளாது மறைந்து நிற்கும் மாட்சியுடைய கள்வனும் நீயே. (உயிர் உலகங்கட்கு உடையான் நிலைக்களமாக உடனாய் நிற்கும் இயைபுபற்றி) பழைமையான ஆருயிர்களும் நீயே. உடம்புகளும் நீயே. அவ்வுயிர்கள் உய்வதற்குரிய படி முறைபோன்று அமைந்துள்ள பல்வேறுவகையான சமயப் பகுதிகளும் நீயே, எட்டுத் திருத்தோள்களையும், மூன்று திருக்கண்களையும் செவ்வானன்ன திருமேனியையும் உடைய எந்தையே! (உன் திருவடிக்கு அடியேன் எந்தமுறையாகத் தொண்டு புரிவேன்) எந்தமுறையாக மெய்யன்பர்கள் தொண்டு பூண்டு பணிவர். அவர்தம் திருப்பணியினை நீ எவ்வாறு ஏற்றருள்வை?

சூட்டி எனதென் றிடுஞ்சுமையைச்
    சுமத்தி எனையுஞ் சுமையாளாக்
கூட்டிப் பிடித்து வினைவழியே
    கூத்தாட் டினையே நினதருளால