பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

39

"மனமாயை மாயைஇம் மாயை மயக்க
 மனமாயை தான்மாய மற்றொன்று மில்லை
 பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா
 தனையாய்ந் திருப்பது தத்துவந் தானே."
- 10 2916.
(9)
ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
    ஆளினுங் கடல்மீதிலே
  ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
    அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
    நெடுநா ளிருந்தபேரும்
  நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
    நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
    உறங்குவது மாகமுடியும்
  உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
    ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற
    பரிசுத்த நிலையை அருள்வாய்
  பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகி்ன்ற
    பரிபூர ணானந்தமே.
     (பொ - ள்.) 'ஆசைக்கோ . . . கலைந்திடுவர்' - (ஆரா இயற்கை அவா ஆதலின்) அவாவினுக்கு யாண்டும் ஒரு வரம்பில்லை. (ஏனெனின்) நிலவுலகமனைத்தினையும் ஒரு குடைக்கீழ் ஆளினும் (ஆளும் வேந்தன தெண்ணம்) கடல் நடுவண் காணப்படும் எண்ணிலாத் தீவுகளையும் தன்னடிப்படுத்துத் தன் ஒப்பற்ற ஆணையினை அவற்றின்கண்ணும் செலுத்தவே நாணாளும் எண்ணும் (மேலும் கடலையும் தன் ஆளுகைக் குட்படுத்தலும,் வானத்தை யுட்படுத்தலும் திங்கள் மண்டில முதலிய கோள் உலகங்களைத் தன்னாளுகைக்கு உட்படுத்தலும் ஆகிய ஆனா முயற்சி தானா முனைந்து அறிவியல் வாயிலாக நடக்கின்றமையை இன்றுங் காண்கின்றாம்.) எண்ணமும் முயற்சியும் மேலிட்டுச் சேறலும் கொள்வர்: செல்வக் கோமானாகிய குபேரனையொத்த பெரும் பொருட் குவியலை வரம்பின்றி யடைந்தவர்களும், மேலும் பொருட் குவியல் தொகுக்க உன்னிச் செம்பு முதலிய பொருள்கள் பொன்னாக மாறும் இரசவாதத் தொழிலுக்குக் காடும் மலையும் நாடுமாய்த் திரிந்தலைந்து வாடுவர்;

     'நெடுநா . . . மாகமுடியும்' - இவ்வுலகில் அளவிறந்த காலம் சிற்றின்ப நுகர்ச்சியை இடையறாதுற்று வாழ்ந்தவரும், மனநிறை வெய்தாது