பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

425
இணையில் வண்பெருங் கருணையே
    ஏத்திமுன் எடுத்தசொற் பதிகத்தில்
புணரும் இன்னிசை பாடினர்
    ஆடினர் பொழிந்தனர் விழிமாரி."
- 12. சம்பந்தர் - 161
(4)
கண்டா ருளத்தினிற் காலூன்றிப் பெய்யுங் கருணைமுகில்
அண்டார் புரத்துக்கும் அன்பர் வினைக்கும் அசனிதன்னைக்
கொண்டாடி னார்முனங் கூத்தாடும் மத்தன்றன்கோலமெல்லாம்
விண்டாலம் மாவொன்றுங் காணாது வெட்ட வெறுவெளியே.
    (பொ - ள்.) (விழுமிய முழுமுதல்வன் அவன் திருவருளால் நன்னெறி நாற்படி நற்றவத்தோர்க்குத் தன்னை நீங்குநிலையாகிய திருக்கோலத்தின்வழி முதற்கண் காட்டியருள்வன், அங்ஙனம்) கண்ட நற்றவத்தரின் தூயவுள்ளத்தின்கண் அடிவைத்துப்பொன்றாது பொழியும் அந்தண் மழையாய் நின்றருள்வன்; அறத்தோ டண்டாதவர் முப்புரத்தவர். அவர்தம் முப்புரத்துக்கும் திருவடி மெய்யன்பர்தம் இருவினைக்கும் இடியாய் நின்று அழித்தருள்வன்; தன்னைக் கொண்டாடி வழிபடும் தன்மையார் முன் திருக்கூத்தாடும் பெரும்பித்தன்; அவன்றன் நீங்குநிலைத் திருக்கோலங்களை ஓதி விலக்கிக் கொண்டுவந்தால் அவ்வொன்றும் உணர்வின் நேர்பெற வராது வெட்டவெறு வெளியெனப்படும் திருச்சிற்றம்பலமே தோன்றும். திருச்சிற்றம்பலமெனினும் அறிவுவெளியினினும் ஒன்றே. அறிவுவெளி-சிதாகாயம். அம்மா : வியப்பிடைச்சொல். இவ்வுண்மை வருமாறு :

"பெருநில மாயண்ட மாயண்டத் தப்பால்
 குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
 பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
 அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே."
- 10. 2760
(5)
வெளியான நீயென் மனவெளி யூடு விரவின்ஐயா
ஒளியாருங் கண்ணும் இரவியும் போல்நின் றுலாவுவன்காண்
அளியாருங் கொன்றைச் சடையாட அம்புலி யாடக்கங்கைத்
துளியாட மன்றுள் நடமாடும் முக்கட் சுடர்க்கொழுந்தே.
    (பொ - ள்.) திருச்சிற்றம்பலமாய்த் திகழும் நீ அடியேனுடைய மனவெளியின்கண் ஒன்றாய் வேறாய் உடனாம்புணர்ப்பாய் விரவி யருள்வையானால் ஒளியுடைய விழியும் அவ்விழிக்குத் துணை நிற்கும் பேரொளிசேர் பகலோனும் விட்டு நீங்காதிணைந்து வியத்தகு காட்சியால் இன்புறுவது போன்று நின்று நிறையின்பத்தழுந்துவேன்; வண்டுகள் தேனையுண்டற்பொருட்டு மொய்க்கும் திருக்கொன்றை மாலையினைச் சூடியருளிய திருச்சடையாடவும் ஆருயிரின் அடையாளமாக அத் திருச்சடையின்கட் காணப்படும் அம்புலியாடவும், அவ்வம்புலியுடன் காணப்படும் நடப்பாற்றலின் அடையாளமாகிய வான் புனல்