கழுதிரதம் - பேய்த்தேர்.
1 (6)
பொருளாகக் கண்டபொரு ளெவைக்கும் முதற் பொருளாகிப் | போத மாகித் | தெருளாகிக் கருதும்அன்பர் மிடிதீரப் பருகவந்த | செழுந்தே னாகி | அருளானோர்க் ககம்புறமென் றுன்னாத பூரணஆ | னந்த மாகி | இருள்தீர விளங்குபொரு ளியாதந்தப் பொருளினையாம் | இறைஞ்சி நிற்பாம். |
(பொ - ள்.) 'பொருளாகக் . . . செழுந்தேனாகி' - (உலகிடைக் காணப்படும் பொருளனைத்தும் "அவன். அவள் அது" எனச் சுட்டி உணரப்படுவதாகிய தோன்றி நின்று ஒடுங்குந்தன்மையுள்ள காரியங்களாகும், அக் காரியப்) பொருளாகக் கண்டபொருள் எல்லாவற்றுக்கும் முன்னுள்ளதாய் அவற்றைத் தன் ஆணையின் வாயிலாகத் தோற்றுவித்தருளும் வினைமுதற்பொருளாகி, தானே தனித்து விளங்கும் பேரறிவாகி, (இயல்பாகவே பாசங்களினின்று நீங்கின மையால்) யாவர்க்கும் தெளிவிக்குந் தெளிவாகி, தன்னை இடையறாது உள்ளன்புடன் கருதும் மெய்யடியார்கட்கு (மலப்பிணிப்பினால் திருவருட் செல்வம் பெற்றுத் திளைக்கும் பேறில்லாத) இன்பவறுமை முற்றுந் தீரவும் (தீர்ந்ததனால்) உட்கொளவந்த திருவருட் செல்வமாகிய வற்றாத தெவிட்டாத செழுமை மிக்க தேனாகி;
'அருளானோர்க் . . . . . . நிற்பாம்' - (நன்னெறி நான்மை கடைப்பிடித்து ஒழுகிவந்துள்ள நற்றவப் பேற்றால்) திருவருள் கைவரப் பெற்றுள்ள அருட்செல்வர்க்கு உள்ளென்றும் வெளியென்றும் நினைத்துப் பிரித்தறிய வாராவண்ணம் (எள்ளில் எண்ணெய் போல்) எங்குமாய் நிறைந்த பேரின்பமாகி (மாயைத் தொடர்பின்மையால் ஆருயிர்களின் அக இருள் தீர, மேலாக விளங்கியருளுகின்ற அழியாப் பொருளாகும் (என்றும் ஒன்றுபோல் நின்றருள்வது ஏது) அந்தப் பொருளை மனம் மொழி மெய்களால் முறையே படர்ந்தும் பகர்ந்தும் பணிந்தும் வணங்கி அவன்பின் நிற்பாம்.
(வி - ம்.) இறைவன் "முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம்பொரு"ளாதலின் முதற்பொருளாகி என்றனர். மாயாகாரியப் பொருள்களுக்குச் சிறிதும் அறிவின்மையால் முதன்மை எய்தும் வாய்ப்பில்லை, ஆருயிர்கட்கு முதல்வன் உடனாய்த் துணைநின்று விளக்க
1. | சடங்கொண்ட. 1. 118 - 10. |