பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

509

ஓவென்ற சுத்தவெளி யொன்றே நின்றிங்
    குயிரையெல்லாம் வம்மினென உவட்டா இன்பத்
தேவென்ற நீகலந்து கலந்து முத்தி
    சேர்த்தனையேல் குறைவாமோ செகவி லாசம்.
     (பொ - ள்.) ஓவென்று வியந்து கொண்டாடத்தக்க திருவருள் வெறுவெளி யொன்றினுள்ளே நின்று இவ்வுலகிடைக் காணப்படும் ஆருயிர்கள் அனைத்தையும், வாருங்கள் என்று திருவருளால் பரிந்தழைத்து வெறுப்பெய்தாத பேரின்பப் பெருவாழ்வைத் தருகின்ற முழுமுதல் தெய்வம் என்று யாவராலுங் கொண்டாடப்படுகின்ற தேவரீர் கூடிக் கூடிக் கருணையினால் வீடுபேற்றிற் சேர்த்தருள் வையேல், இவ்வுலக விரிவு குறைபட்டொழியுமோ? அல்லது "காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி" என்பதற் கிணங்க உலகத்திருவிளையாடல் குறைபா டெய்துமோ? விலாசம் - விரிவு; விளையாட்டு.

(5)
செகத்தையெல்லாம் அணுவளவுஞ் சிதறா வண்ணஞ்
    சேர்த்தணுவில் வைப்பைஅணுத் திரளை எல்லாம்
மகத்துவமாப் பிரமாண்ட மாகச் செய்யும்
    வல்லவா நீநினைத்த வாறே எல்லாம்.
     (பொ - ள்.) உலகங்கள் அனைத்தையும் நுண்ணிய அணுவளவும் கெடாதபடி மீநுண்மை எனப்படும் பரமாணுவின்கண் ஆற்றல் வடிவாக ஒடுக்கிவைத்தருள்வை; அங்ஙனம் நின்திருவருளால் ஒடுக்கப்பட்ட அவ்வணுக் கூட்டங்களை யெல்லாம் வியக்கத் தகுந்த மிகப் பெரிய உலகங்களாகத் தோன்றச் செய்தருள்வை; அத்தகைய முடிவில்லாத வல்லமையை உடையாய்; இங்ஙனம் செய்தருள்வதனைத்தும் நின் திருக்குறிப் பெனப்படும் சங்கற்பத்தானாகும். செகம் - உலகம்.

     (வி - ம்.) அணுவென்னுஞ் சொல் பண்டைத் தமிழ் நூல்களில் "மண்" எனவழங்கிய வியல்பினைக் காணலாம். புறநானூறு ஆறாம் பாடலில் "மண்டிணிந்த நிலனும்" என வழங்கப்பட்டுள்ளது காண்க.

(6)
சொல்லாலே வாய்து டிப்பதல்லால் நெஞ்சந்
    துடித்திருகண் நீரருவி சொரியத் தேம்பிக்
கல்லாலே இருந்தநெஞ்சுங் கல்லால் முக்கட்
    கனியேநெக் குருகிடவுங் காண்பேன் கொல்லோ.
     (பொ - ள்.) வாய்ச்சொல்லளவில் பதைபதைப்பதல்லாமல், அதற்கியைய நெஞ்சமுந் துடித்துப் பதைபதைப்பதில்லை; (பதைபதைக்குமானால் அதன் அடையாளமாகிய) கண்களினின்றும் மலையிலிருந்து தாழ்வரையில் வீழும் அருவிபோல் கண்ணீர் சொரியவும், அதனால் வாட்டம் எய்திக் கல்லையொத்திருந்த எளியேன் நெஞ்சமும் கல்லால