என்னும்) அந்தக்கரணங்களுடன் அடியேன் உறவு கொள்ளுதல் செய்யேன்.
(வி - ம்.) சொல் - மாற்றம். சிவன்மாற்றங்கழிய நிற்கும் மறையோன். சொல்லால் பெறப்படுவன பாசவுணர்வு.1பாசவுணர்விற்கு எட்டாதவன் சிவன். எண்ணம் - சித்தம். மனம் - நினைப்பு. எழுச்சி - அகங்காரம். இறுப்பு - புத்தி. அறிவுள்ள ஆவியே அந்தக்கரணங்களுடன் கூடி அறிதலும் செய்தலும் செய்யும். அவை சிறப்பாகிய திருவடிப்பேற்றிற்குத் துணையாகவிருந்தால் விரும்பத்தக்கனவாகும். பிறப்புக்குத் துணையாகிவிடின் வெறுக்கத்தக்கதாகும். அறிவில்லாத கல்லாகவிருந்தால் அவற்றுடன் கூடுவதற்கில்லை. கூடியும் பயன்பெறும் நிலையில்லாமை பற்றி இங்ஙனம் வெறுத்தியம்பலாயினர்.
(20)
கலங்காத நெஞ்சுடைய ஞான தீரர் | கடவுளுனைக் காணவே காய மாதி | புலம்காணார் நானொருவன் ஞானம் பேசிப் | பொய்க்கூடு காத்ததென்ன புதுமை கண்டாய் |
(பொ - ள்.) திடமான நெஞ்சுடைய மெய்யுணர்வு வீரர் நின் திருவருளால் கடவுளே நின்னைக் கண்டுகொண்டபின் உடம்பு முதலாய மாயாகாரிய உலகவெளிப் பொருள்களை ஒரு சிறிதுங் காணார். அடிமையாகிய புல்லிய அறிவுடைய யான் வாயினால் மெய்யறிவுகளை ஓயாது பேசிப் பிதற்றி நிலையில்லாத பொய்க் கூடாகிய இவ்வுடம்பினைக் காத்து என்ன புதுமை கண்டாய். பொய்-நிலையில்லாதது. மெய்-நிலையுள்ளது
(21)
கண்டிலையோ யான்படும்பா டெல்லாம் மூன்று | கண்ணிருந்துந் தெரியாதோ கசிந்துள் ளன்பார் | தொண்டரடித் தொண்டனன்றோ கருணை நீங்காச் | சுத்தபரி பூரணமாஞ் சோதி நாதா. |
(பொ - ள்.) அடியேன் படும் பொறுக்கமுடியாத துன்பங்களையெல்லாம் மூன்று திருக்கண்களைத் 2தேவரீர் உடைத்தாயிருந்தும் பார்த்திலிரோ? உள்ளம் உருகி உள்ளன்பு நிறைந்துள்ள தொண்டர் தம் அடித்தொண்டனல்லனோ யான்? தண்ணளியாகிய கருணை நீங்காத மாசற்ற முழு நிறைவாகிய பேரொளிப் பெருமானே. முழுநிறைவு - அகல் நிறைவு; வியாபகம்.
(22)
சோதியாய் இருட்பிழம்பைச் சூறை யாடுந் | தூவெளியே எனைத்தொடர்ந்து தொடர்ந்தெந் நாளும் | வாதியா நின்றவினைப் பகையை வென்ற | வாழ்வேஇங் குனைப்பிரிந்து மயங்கு கின்றேன். |
1. | 'பாசஞானத்தாலும்,' சிவஞானசித்தியார், நூற்பா - 9. |
2. | 'ஏன்றுகொண்டதோர்,' 7. 54 - 4. |