(பொ - ள்) மண்ணுலகத்துள்ளார் அனைவரும் உறங்குவர்; விண்ணுலகத்தாரனைவரும் உறங்குவர். வேறுள்ள உலகினரும் உறங்குவர் : எம் தலைவர்மாட்டு வைத்துள்ள காதன் மிகுதியால், அடியேன் கண்ணுறங்குவதில்லை.
(44)
மட்டுப் படாத மயக்கமெல்லாந் தீரஎன்னை | வெட்டவெளி வீட்டில்அண்ணல் மேவுவனோ பைங்கிளியே. |
(பொ - ள்) அளவிடப்படாத உலகியல் மயக்கத்தில் உழலும் எளியேனை, அம் மயக்கங்கள் முற்றும் நீங்கும்படி திருச்சிற்றம்பலம் எனப்படும் வெட்டவெளி வீட்டில் வந்து என் தலைவர் கலந்தருள்வரோ?
(45)
மாலைவளர்த் தென்னை வளர்த்திறைவர் பன்னெறியாம் | பாலைவனத் தில்விட்ட பாவமென்னோ பைங்கிளியே. |
(பொ - ள்) செந்நெறியாகிய சித்தாந்த சைவத்தின்கண் எளியேனுக்குப் பற்றுண்டாகும்படி செய்தருளி அப் பற்றினை வளர்வித்து ஆட்கொண்ட தலைவர், இப்பொழுது முக்கூற்றுப் புறச் சமயங்களாம் பாலை நெடுவனத்தில் அடியேனை அலையவிட்டனர். அங்ஙனம் விட்டமைக்கு அடியேன் செய்த பாவம் யாதாகுமோ? மாலை - பற்று; ஆசை.
(46)
மெய்யில்நோய் மாற்றவுழ்தம் மெத்தவுண்டெம் அண்ணல்தந்த | மையல்நோய் தீர்க்க மருந்தும்உண்டோ பைங்கிளியே. |
(பொ - ள்) இவ்வுலகின்கண் உடம்புக்கு ஏற்படும் நோய்களை நீக்கிக்கொள்ள மருந்துகள் பலவுள; ஆனால் அடியேன் தலைவர் வந்து எளியேனை யாண்டு எளியேனது எங்குமில்லாத காதலைத் தந்தருளிப் பின் நோக்குதல் செய்யாதிருக்கின்றனர். அந்நோய் நீங்குதற்கு அவரே மருந்தன்றி வேறு மருந்துமுண்டோ1? (இல்லையென்பதாம்.)
(47)
மேவுபஞ்ச வண்ணமுற்றாய் வீண்சிறையால் அல்லலுற்றாய் | பாவிபஞ்ச வண்ணம் பகர்ந்துவா பைங்கிளியே. |
(பொ - ள்) பொருந்திய ஐவகை நிறங்களையும் பெற்று அழகாக இருக்கின்ற நீ, வீணாகச் சிறையிலடைபட்டுத் துன்புற்றனை. இப்பொழுது உன்னைச் சிறையின்நின்று விட்டுவிடுகின்றேன். அடியேன் காதன் மிகுதியாற்படும் துன்ப நிலையின் தாழ்வனைத்தும் எளியேன் தலைவர்க்கு எடுத்து மொழிந்து வருவாயாக.
(48)
வாய்திறவா வண்ணமெனை வைத்தாண்டார்க் கென்துயரை | நீதிறவாச் சொல்லின் நிசமாங்காண் பைங்கிளியே. |
(பொ - ள்) வீண்சொற்கூற வாய் திறவாதவாறு அடியேனை அடக்கி ஆட்கொண்டருளிய அடியேனின் காதலருக்கு, எளியேன்படும்
1. | 'பிணிக்கு'. திருக்குறள். 1102. |