பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

629
நின்று பெருமயக்கத்தினைச் செய்யும் தூவாமாயைத் தொடக்கு முடியுநாள் எந்நாளோ?

    (வி - ம்.) இவை ஆருயிர்க்கு வேறானவை என்றும், காரியப் பொருள்கள் என்றும், நிலையில்லாதன என்றும் நல்லமுறையாக ஆய்ந்துணராக் குற்றத்தால் அவற்றின் மயக்கத்திற்கு உட்பட நேருகின்றது. உடல் - தனு. உறுப்பு - கரணம். உலகம் - புவனம். உண்பொருள் - போகம்.

(22)
சத்த முதலாத் தழைத்திங் கெமக்குணர்த்துஞ்
சுத்தமா மாயை தொடக்கறுவ தெந்நாளோ.
    (பொ - ள்.) ஒலியெனப்படும் பொருளுணர்த்தும் நுண்ணோசை முதலாகத் தழைத்து எமக்கு அறிவினை உணர்த்தும் தூமாயையின் தொடக்கு அற்று அகலுவ தெந்நாளோ?

    (வி - ம்.) நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை செவியோசை என வாக்கு நால்வகைப்படும். அவற்றால் வரும் நூலுணர்வு கீழ்நிலை உணர்வு எனப்படும். கீழ்நிலை உணர்வு - அபரஞானம் நுண்ணோசை - சூக்குமை. நினைவோசை - பைசந்தி. மிடற்றோசை - மத்திமை. செவியோசை - வைகரி.1

(23)
எம்மை வினையை இறையைஎம்பாற் காட்டாத
அம்மை திரோதை அகலுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மலப்பிணிப்புக்குட்பட்டுப் பிணிப்பி என்று சொல்லப்படும் உடலுடன் கூடிப் பசுத்தன்மை எய்திய ஆருயிர்களாகிய எம்மையும், எம்மைப் பிறப்பு இறப்புகட்கு உட்படுத்தும் வினையையும், பிணிப்பின்றி இயல்பாகவே வாலறிவனாய்த் தனி முதல்வனாய் நிற்கின்ற இறைவனையும், எளியேங்கட்கு உணர்த்தியருளாத அம்மையெனப்படும் மறைப்பாற்றலாகிய திரோதாயி அடியேன் உய்யும்படி சிறப்பாற்றலாகிய அருட்சத்தியாகத் தோன்றி அகலுநாள் எந்நாளோ2 ?

(24)
நித்திரையாய் வந்து நினைவழிக்குங் கேவலமாஞ்
சத்துருவை வெல்லுஞ் சமர்த்தறிவ தெந்நாளோ.
    (பொ - ள்.) பேருறக்கத்தின்கண் நினைவெழாமை போன்று (ஆணவமலத் தொடக்கால்) அறிவெழாமல் தடுக்கும் ஆணவ மலமென்னும் பெரும்பகையினை வெல்லும் பெருந்திறலாம் சமர்த்தினைத் திருவருளால் பெற்று வெல்லுவது எந்நாளோ? இது புலம்பு நிலையாகிய கேவலம்.

(25)
சன்னல்பின்ன லான சகலமெனும் குப்பையிடை
முன்னவன்ஞா னக்கனலை மூட்டுநாள் எந்நாளோ.
 1. 
'மூவகை அணுக்க.' சிவஞான சித்தியார், 1. 1 - 25. 
 2. 
'இனையபல.' சிவப்பிரகாசம், 48.