பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


685


     (பொ - ள்) (அனைத்திற்கும் "தாரகமாம் அத்தன்தாள்" என்பதனால் மாயையிற் றோன்றிய சிந்தையினைத் திருவருள் வெளியிற்றோன் றியதென ஏற்றி மொழிவர்.) எவ்விடத்தினின்று மனந் தோன்றியதோ, அங்கேயே அம் மனம் ஒடுங்கிவிடுகின்றது. எல்லா நிலைகளும் ஆங்கே யுள்ளன. அங்கேயே எளியேன் அறிவுந் தெளிவடைந்தது. அங்கேயே அடியேன் ஆண்டான் திருவடியில் இரண்டறக்கலந்து மெய்ப்புணர்ப்பின்பம் பெற்றதுமாகும்.

(20)
ஆங்கென்றும் ஈங்கென்றும் உண்டோ - சச்சி
    தானந்த சோதி அகண்ட வடிவாய்
ஓங்கி நிறைந்தது கண்டால் - பின்னர்
    ஒன்றென் றிரண்டென் றுரைத்திட லாமோ - சங்கர
     (பொ - ள்) அவ்விடத்ததென்றும், இவ்விடத்ததென்றும் சுட்டிப் பேசப்படுவதுண்டோ? உண்மையறிவு இன்ப வொளியாய் எல்லையில்லாததாயுள்ள பெருவடிவாய் ஓங்கி எங்கணும் நீக்கமற நிறைந்து நிற்கும் மெய்ப்பொருளைத் திருவருளால் காணப்பெற்றால், அதன் பின்பு தூய மெய்ப்புணர்ப்பே அன்றி ஒன்றென்றோ, இரண்டென்றோ வேறுபடச் சொல்லுதல் ஆகுமோ? (ஆகாதென்க.)

     (வி - ம்) தூயமெய்ப்புணர்ப்பு - சுத்தாத்துவிதம். ஒன்றெனக் கூறின் உயிர் அழிந்துபடும். இரண்டெனக் கூறின் உயிர் கலவாதிருக்கும். உயிர் திருவடியிற் கலந்து அழியாது அடங்கி அழுந்தியறிந்தின்புற்றுக் கொண்டிருக்கும்.

(21)
என்றும் அழியும்இக் காயம் - இத்தை
    ஏதுக்கு மெய்யென் றிருந்தீர் உலகீர்
ஒன்றும் அறியாத நீரோ - யமன்
    ஓலை வந்தாற்சொல்ல உத்தரம் உண்டோ - சங்கர
     (பொ - ள்) உலகத்தோரே! இந்த உடம்பானது எக்காலத்திலும் அழியுந்தன்மை உடையதேயாம். அத் தன்மை வாய்ந்த இவ்வுடம்பினை என்ன காரணத்தினால் உண்மையென்றும், அழியாததென்றும், நிலைத்திருக்கக் கூடியதென்றும் நினைந்திருந்தீர்கள்? சிவபெருமான் திருவடியினை அடைதற்குரிய பயிற்சிக்கு வேண்டிய வழிவகைகளும் கருவிகளும் முதலியவற்றுள் ஒன்றையும் உணராதிருக்கின்றீர்; அத்தகைய நீங்கள் நடுவன் எனப்படும் எமன் ஓலை வந்தால் அதற்கு என்ன விடை சொல்லுவீர்?

(22)
உண்டோ நமைப்போல வஞ்சர் மலம்
    ஊறித் ததும்பும் உடலைமெய் யென்று
கொண்டோ பிழைப்பதிங் கையோ - அருட்
    கோலத்தை மெய்யென்று கொள்ளவேண் டாவோ - சங்கர
     இவ்வுலகின்கண் நம்மைப் போன்ற வஞ்சகர்கள் உளரோ? ஆணவ மலம் மிகுந்து துளும்புகின்ற இவ்வுடம்பினை அழியாதிருக்கும்