பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


126


"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
 பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
 அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
 என்போல் மணியினை எய்தவொண் ணாதே."
- 10. 251.
    ஆண்டவன் அன்பின் முதிர்ச்சியாம் பத்தியிற் சிக்குவன் :

"ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற் கன்பிலை என்புருகிப்
 பாடு கின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை பணிகிலை பாதமலர்
 சூடு கின்றிலை சூட்டுகின் றதுமிலை துணையிலி பிணநெஞ்சே
 தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை செய்வதொன் றறியேனே."
- 8. ஆத்துமசுத்தி - 1.
(9)
இங்கற்ற படியங்கு மெனவறியு நல்லறிஞர்
    எக்காலமும் உதவுவார்
  இன்சொல்தவ றார்பொய்மை யாமிழுக் குரையார்
    இரங்குவார் கொலைகள்பயிலார்
சங்கற்ப சித்தரவ ருள்ளக் கருத்திலுறை
    சாட்சிநீ யிகபரத்துஞ்
  சந்தான கற்பகத் தேவா யிருந்தே
    சமத்தஇன் பமும்உதவுவாய்
சிங்கத்தை யொத்தெனைப் பாயவரு வினையினைச்
    சேதிக்க வருசிம்புளே
  சிந்தா குலத்திமிரம் அகலவரு பானுவே
    தீனனேன் கரையேறவே
கங்கற்ற பேராசை வெள்ளத்தின் வளரருட்
    ககனவட் டக்கப்பலே
  கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
    கருணா கரக்கடவுளே.
     (பொ - ள்) "இங்கற்ற . . . . . . பயிலார்" - இம்மையில் (திருவருள் நினைவால் உடலூழாய்க் கழிகின்ற ஊழொழிந்து) தன்னை மறந்து செய்யும் ஏறுவினை இம்மையே அற்றுப்போம் முறைமைபோல் மறுமையிலும் ஆமென்றறிகின்ற பேரறிஞர் எந்தக் காலத்திலும் யாவர்க்கும் வேண்டுவ மறாமல் உதவுவார்; (எவரோடும்) இன்சொற் புகல்வதில் இம்மியுந் தவறார். (எவ்வுயிர்க்கும் யாண்டும் துன்பம் வருதற் கேதுவாகிய) பொய்ம்மை யென்று சொல்லப்படும் குற்றச் சொற்களைச் சொல்லார். எவ்வுயிர்க்கும் உளங்கசிந்து பரிவர். (கனவிலும்