மேற்கொள்ளும்படி என்றும் பொன்றாத சிவராச யோகச் செல்வராய் வானவர்கோன் முதலாகச் சொல்லப்படும் தேவர்கள் அனைவர்களும், வெற்றியுண்டாகுக, மாறா வெற்றியுண்டாகுக என்று வாழ்த்து மொழியக் கொலுவீற்றிருந்தருளும் நுமது பெருமை (எவர்க்கும்) எடுத்தியம்பி ஏத்த எளிதோ!
"வேதாந்த . . . சித்தர்கணமே"
(வி - ம்) கெசம் - யானை. துரகம் - குதிரை - சதுரங்கம் - நால் வகையுறுப்பு. கேள்வி - பணிகேட்டல். கெடி - சீர்த்தி. தலம் - ஆதாரம். இள்ளாக்கு - ஆணை. விசயம் - வெற்றி. எண்ணம் - சித்தம். எழுச்சி - ஆங்காரம். இறுப்பு - புத்தி. மும்மண்டலம் - தீமண்டலம், ஞாயிற்று மண்டலம், திங்கள் மண்டலம்.
| தீமண்டலம் - மூலமுதல் கொப்பூழ்வரை |
| ஞாயிற்றுமண்டலம் - கொப்பூழ் முதல் கண்டம் வரை. |
| திங்கள்மண்டலம்-கண்டமுதல் புருவநடு வரை. |
ஆறு நிலைகள்; 1. மூலம், 2. கொப்பூழ், 3. மேல்வயிறு 4, நெஞ்சம், 5. மிடறு, 6. புருவநடு.
(மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தம், ஆக்ஞேயம்.)
ஆணிலே பெண்ணிலே என்போல ஒருபேதை | அகிலத்தின் மிசையுள்ளதோ | ஆடிய கறங்குபோ லோடியுழல் சிந்தையை | அடக்கியொரு கணமேனும்யான் | காணிலேன் திருவருளை யல்லாது மௌனியாய்க் | கண்மூடி யோடுமூச்சைக் | கட்டிக் கலாமதியை முட்டவே மூலவெங் | கனலினை எழுப்பநினைவும் | பூணிலேன் இற்றைநாட் கற்றதுங் கேட்டதும் | போக்கிலே போகவிட்டுப் | பொய்யுலக னாயினேன் நாயினுங் கடையான | புன்மையேன் இன்னம்இன்னம் | வீணிலே யலையாமல் மலையிலக் காகநீர் | வெளிப்படத் தோற்றல் வேண்டும் | வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற | வித்தகச் கித்தர்கணமே. |