பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

243
     (வி - ம்.) குறி - அடையாளம். அனல் - தீ. மயம் - வடிவம். உருவம். தனு - உடம்பு. கரணம் - உறுப்பு. உபலம் - பளிங்குக்கல் ப்ரசாதம் - அருட்கொடை; படைப்பு. சுகம் - இன்பம்.

     படிகவொப்பு வருமாறு:

"பன்னிறங்கள்1அவைகாட்டும் படிகம் போல் உள்ளம்
    பலபுலன்கள் நிறங்காட்டும் பரிசு பார்த்திட்
 டிந்நிறங்கள் என்நிறமன் றென்று தன்தன்
    எழில்நிறங்கண் டருளினால் இந்நிறத்தின் வேறாய்ப்
 பொய்ந்நிறஐம் புலநிறங்கள் பொய்யெனமெய் கண்டான்
    பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் பின்னை
 முன்நிறைநீர் சிறைமுறிய முடுகி யோடி
    முந்நீர்சேர்ந் தந்நீராய்ப் பின்நீங்கா முறைபோல்"
- சிவஞானசித்தியார், 8. 4 - 1.
(2)
 
ஐந்து பூதமொரு கானல் நீரென
    அடங்க வந்தபெரு வானமே
  ஆதி யந்தநடு வேது மின்றியரு
    ளாய்நிறைந் திலகு சோதியே
தொந்த ரூபமுடன் அரூப மாதிகுறி
    குணமி றந்துவளர் வத்துவே
  துரிய மேதுரிய உயிரி னுக்குணர்வு
    தோன்ற நின்றருள் சுபாவமே
எந்த நாளுநடு வாகி நின்றொளிரும்
    ஆதியே கருணை நீதியே
  எந்தை யேஎன இடைந்திடைந் துருகும்
    எளிய னேன்கவலை தீரவுஞ்
சிந்தை யானதை யறிந்து நீயுனருள்
    செய்ய நானுமினி யுய்வனோ
  தெரிவ தற்கரிய பிரம மேஅமல
    சிற்சு கோதய விலாசமே.
     (பொ - ள்) "ஐந்து . . . சோதியே" - (அறிவுப் பெருவெளியென்னும்) திருவருட்பரவெளியின்கண் ஐம்பெரும் பூதங்களும்

 
 1. 
'பன்னிறங் காட்டும்' சிவஞானபோதம், 8. 3 - 1.