பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

246
         "தெரிவ . . . விலாசமே" -

     (வி - ம்.) ஐவர்: தொகைக்குறிப்புச் சொல். அவை: மெய், வாய், கண், மூக்குச் செவி யென்னும் ஐம்பொறிகள். பொறிகள் - இந்திரியங்கள். மர்க்கடம் - குரங்கு. முட்டி - வலுவானபிடி; குரங்குப் பிடி. சவுபானம் - சோபானம் - ஏணிப்படி. கருணை - தண்ணளி. சாரதி - வலவன்.

     கடுந்தவ நிலைமையினைப் "புற்றுமாய்மரமாய்" (பக்கம் 104) என்னும் திருமாமறை முடிபுத்திருப்பாட்டினா னுணர்க. மேலும் 16. பட்டினத்துப்பிள்ளையாரருளிய திருவிடை மருதூர் மும்மணிக் கோவைக் கண்-19. "புண்ணிய புராதன" எனத் தொடங்குந் திருப்பாட்டில் "மலர்தலையுலகத்து" என்பது முதல் "சாலவுமொறுப்பர்" என்பது முடியவரும் வரிகள் பதினாறாலும் காணலாம்.

     நன்னெறி நற்படி நான்குமே முதல்வன் திருவடிசேர்க்கும் பெருநெறியாம் உண்மை வருமாறு காண்க :

"பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால்
 ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல்
 மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி
 ஆணிக் கனகமும் ஒக்குமை யாறன் அடித்தலமே".
- 4. 93 - 6
     ஐம்பொறிகளையும் வேடராக உருவகப்படுத்தும் மெய்ம்மை வருமாறு :

"மன்னவன்தன் மகன்வேடர் இடத்தே தங்கி
    வளர்ந்தவனை யறியாது மயங்கி நிற்பப்
 பின்னவனும் என்மகன் நீ யென்றவரிற் பிரித்துப்
    பெருமையொடுந் தானாக்கிப் பேணு மாபோல்
 துன்னியஐம் புலவேடர்1 சுழலிற் பட்டுத்
    துணைவனையும் அறியாது துயருறுந்தொல் லுயிரை
 மன்னும்அருட் குருவாகி வந்தவரின் நீக்கி
    மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்."
- சிவஞானசித்தியார், எட்டாம் நூற்பா.
(4)
 
ஏக மானவுரு வான நீயருளி
    னால னேகவுரு வாகியே
  எந்த நாளகில கோடி சிர்ட்டிசெய
    இசையு நாள்வரை யநாள்முதல்
ஆக நாளது வரைக்கு முன்னடிமை
    கூடவே சனன மானதோ
  அநந்த முண்டுநல சனன மீதிதனுள்
    அறிய வேண்டுவன அறியலாம்.
 
 1. 
'ஐம்புலவேடரின்' சிவஞானபோதம், எட்டாம் நூற்பா.