பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

365
காரியப்பாடு நிகழ்தலின்) அடியேன் அழுந்தும் பிறப்பும் நீ; அப் பிறப்பினில் ஏற்படும் நன்மையும் தீமையும் நீ; உயிர் மூச்சும் உடலும் நீதானேயாம்.

(5)
 
தானே யகண்டா காரமயந்
    தன்னி லெழுந்து பொதுநடஞ்செய்
வானே மாயப் பிறப்பறுப்பான்
    வந்துன் அடிக்கே கரங்கூப்பித்
தேனே என்னைப் பருகவல்ல
    தெள்ளா ரமுதே சிவலோகக்
கோனே எனுஞ்சொல் நினதுசெவி
    கொள்ளா தென்னோ கூறாயே.
     (பொ - ள்) தானாகவே எங்கணும் பெருநிறைவாய் நின்றருளும் நிலையினின்றும் (நீர்க்குமிழிபோல்) திருவுருவாய் எழுந்து தில்லைத்திருச்சிற்றம்பலத்தின்கண்1 திருக்கூத்தியற்றியருள்பவனே! அடியேனுடைய மயக்கத்தைப் பெருகுவிக்கும் மாயப்பிறப்பினை அறுத்தருளும் பொருட்டு அன்பொடு வந்து உன் திருவடிக்கே எளியேன் கைகூப்பித் தேன்போன்றவனே! அடியேனை ஒடுக்கிக் கொள்ளவல்ல தெளிந்த ஆரமுதே! சிவலோகத்து வேந்தே! எனப் பன்முறையும் எளியேன் புகலும் சொல் நின் திருச்செவியில் கொள்ளாது வாளாவிருப்பதென்னோ? அருள்வாயாக. பருகுதல் - திருவடியில் ஒடுக்கிக் கொள்ளுதல்; விழுங்குவதென்பதும் அதுவே. இறைவன் கொள்ளும் திருவுருவுண்மை வருமாறு :

"அகளமாய் யாரும் அறிவரி தப்பொருள்
 சகனமாய் வந்ததென் றுந்தீபற
 தானாகத் தந்ததென் றுந்தீபற."
- திருவுந்தியார், 1
"இல்லா முலைப்பாலுங் கண்ணீரும் ஏந்திழைபால்
 நல்லாய் உளவாமால் நீர்நிழல்2 போல் - இல்லா
 அருவாகி நின்றானை யாரறிவார் தானே
 உருவாகித் தோன்றானே லுற்று."
- சிவஞானபோதம், 8. 2 - 3.
(6)
 
கூறாநின்ற இடர்க்கவலைக்
    குடும்பக் கூத்துள் துளைந்துதடு
மாறா நின்ற பாவியைநீ
    வாவென் றழைத்தால் ஆகாதோ
 
 1. 
'எம்பிரான் போற்றி.' 8. திருச்சதகம்-47.
 2. 
'ஊராகிநின்ற.' 6. 55 - 5.