(பொ - ள்.) இறையும் உயிரும் ஒன்றென மயங்கிக் கூறும் மாயாவாதக் கொள்கையும், இறையும் உயிரும் இரண்டற்ற ஒன்றாய்ப் புணர்ந்து நில்லாது வேறாகவே நிற்கும் என்னும் வேற்றுமைக்கொள்கையும் கடந்து' செறிவெனப்படும் யோகநிலம் ஏழாவதன்கண் நின்று திருவருளால் தெளிந்தவர் பேசாமையெனப்படும் மௌன முறையினை நீக்கமற நிற்கும் முழு நிறைவினை, தன்னையன்றி ஒரு பொருளும் தனித்தியங்கும் ஆற்றலில்லாத நிலையில் தான் எப்பொருளுமாகி' அவை அசையினும் தான் அசையாதாகி, எக்காலத்தும் நிலைபெற்றுள்ள பேரின்பப் பெருவாழ்வை மிகக்குளிர்ச்சி பொருந்திய இயற்கை இயைவுளை,
செறிவெனப்படும் யோகநிலம் ஏழும் வருமாறு :
1. சுபேச்சை, 2. விசாரணை, 3. தனுமானசி, 4. சத்துவாபத்தி, 5. அசஞ்சத்தி, 6. பதார்த்த பாவனை, 7. துரியகை என்பனவாம்.
(வி - ம்.) இந்நிலம் ஏழனையும் அடையும் மேலோர் முறையே 1. துற்சங்கவற்சிதர்களும், 2. ஞானசாத்திரம் பயின்றவர்களும், 3. மூவேடணை நீத்தவர்களும், 4. ஞானவளர்ச்சியடைந்தவர்களும், 5. தவம்புரிந்தவர்களும், 6. திரிபுடியற்றவர்களும், 7. சிவமாந்தன்மை அடைந்தவர்களுமாவர்.
(2)
பதமூன்றுங் கடந்தவர்க்கு மேலான | ஞானபதப் பரிசு காட்டிச் | சதமாகி நிராலம்ப சாட்சியதாய் | ஆரம்பத் தன்மை யாகி | விதம்யாவுங் கடந்தவித்தை யெனுமிருளைக் | கீண்டெழுந்து விமல மாகி | மதமாறுங் காணாத ஆனந்த | சாகரத்தை மௌன வாழ்வை. |
(பொ - ள்.) சிவவுலகம், சிவனண்மை, சிவ வடிவம் என்னும் ஒப்பில்லாத பெருநிலை மூன்றனையும் 1 திருவருளால் கடந்த திருவடியுணர்வு கைவந்த நற்றவத்தோர்க்கு மூதறிவுப்பெருவாழ்வின் மேலாம் இயல்பினைக் காட்டி, அழிவில்லாததாகி, பற்றுக்கோடில்லாத, சான்று நிலையதாகி, தொடக்கமாந்தன்மையுடையதாகி, வகைகள் பலவுந்தாமாகியும் கடந்த நிலையினதாய், அறிவை மறைப்பதாகிய அறியாமையைச் செய்யும் ஆணவ வல்லிருளைப் பிளந்து தண்ணளியுடன் எழுந்து மலமில்லாததாகி, சமயங்கள் ஆறும் காணாத பேரின்பப் பெருங்கடலை, பேசாமை தோன்ற நிற்கும் பெருவாழ்வை.
(3)
வாழ்வனைத்துந் தந்தஇன்ப மாகடலை | நல்லமிர்தை மணியைப் பொன்னைத் | தாழ்வறஎன் உளத்திருந்த தத்துவத்தை | அத்துவித சாரந் தன்னைச் |
1. | 'புறச்சமய'. சிவஞானசித்தியார், 8. 2 - 1. |