பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

464
     (பொ - ள்.) எளியேனை ஆட்கொண்டருளும் முதல்வனே! இவ் வுடம்பைப் பின்னும் பின்னும் சுமையென்று பேசிக் காலந்தள்ளுவதால் பயன் யாது நாமடைந்தோம்? அவ்வுடலினாலே பேரின்பந் தானாகலே விளையும்; அங்ஙனமிருப்ப என் இந்தத் துன்பம் இனிமேல்?

     (வி - ம்.) திருவருளால் கிடைக்கப்பட்ட இவ்வுடம்பு விழுமிய முழு முதல்வனுக்குச் சிறந்த உறையுளாகிய திருக்கோவிலாகும். அவன் திருவடியைச் சேர்வதற்குப் பெருந்துணையாகவுள்ள கருவிகளில் இவ்வுடல் சிறந்ததாகும். எனவே, அதனை வீணாகப்பழியாது ஓம்பிப் பயன் பெறுதல் வேண்டும். அவ்வுண்மை வருமாறு :

"உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
 உடம்பினுக் சூள்ளே யுறுபொருள் கண்டேன்
 உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்
 றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே."
- 10. 705
(37)
துன்பக் கடலில் துளைந்ததெலாந் தீர்ந்ததே
இன்பக் கடலில் இருமென்ன - அன்பில்
கரைந்து கரைந்துருகிக் கண்ணருவி காட்ட
விரைந்துவரும் ஆனந்தே மே.
     (பொ - ள்.) பிறவியாகியதுன்பப் பெருங்கடலில் இதுகாறும் மூழ்கித் திளைத்தெல்லாம் முடிந்தது; இனி நீங்காத வற்றாத இன்பக் கடலி லிருப்பாயாக. என மனத்திற்கு வற்புறுத்தி அன்பினால் கசிந்து கசிந்து உருகிக் கண்களினின்றும் நீர் அருவிபோன்று சிந்த அப்பேரின்பம் விரைந்து பெருயயுண்டாம்.

(38)
கரைந்து கரைந்துருகிக் கண்ணீரா றாக
விரைந்தே நிருவிற்கப மெய்த - நிரந்தரமும்
நின்னையே சிந்திக்க நீகொடுத்தாய் மோனாநான்
என்னைமுழு துங்கொடுத்தே னே.
     (பொ - ள்.) மௌனமாய் எழுந்தருளிவந்து ஆட்கொண்டருளிய சிவகுருவே, உருகி உருகி, கசிந்து, கண்களினின்றும் நீர் ஆறுபோல் பெருக, விரைவாக வேறுபாடில்லாத மெய்யுணர்வு நிட்டையினை எய்தவும், எப்பொழுதும் நின்னையே நினைக்கவும் நீ திருவருள் கொடுத்தருளினை; அடியேன் என்னை முழுவதும் உனக்கே கொடுத்தேன்.

(39)
அல்லும் பகலும்பே ரன்புடனே தானிருந்தால்
கல்லும் உருகாதோ கல்நெஞ்சே - பொல்லாத
தப்புவழி என்நினைந்தாய் சந்ததமும் நீ இறந்த
எய்ப்பிலே ஆனந்த மே.