பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

466

     (வி - ம்.) கூற்றுவனை உதைத்தருளிய திருக்குறிப்பால் மல நீக்கமும், காமனைக் கண்ணழலால் எரித்தமையால் மாயைத்தூய்மையும், பாற்கடலீந்தமையால் இருவினை நீங்கி எய்தும் இறைபணியும் இன்பத்துய்ப்பும் ஒரு புடையாகக் கருதலாம்.

(43)
விண்ணருவி மேன்மேல் விளங்குவபோ லேஇரண்டு
கண்ணருவி வெள்ளமொடு கைகூப்பித் - தண்ணமிர்த
வெள்ளமே ஆனந்த வெற்பே எனத்தொழுவோர்
உள்ளமே ஞான வொளி.
     (பொ - ள்.) விண்ணினின்றும் அருவி பெருக்கெடுத்து மேன் மேல் பொழிவதுபோல் மனக்கசிவின் அடையாளமாகிய அடியேனுடைய இரண்டு கண்களும் பொழிகின்ற வெள்ளத்துடன் இரண்டு கைகளையும் உச்சியின்மேல் ஏறக்குவித்துத் தொழுது, குளிர்ச்சியும் இனிமையும் பொருந்திய சாவாமருந்தாம் அமிழ்தமே, பேரின்பப் பெருமலையே1 எனத் திருவருள் வழிநின்று நன்னெறி கடைப்பிடித்துத் திருமாமறையோதி வழிபடுவோர்தம் தூயவுள்ளத்தின்கண் திருவடியுணர்வுச்சுடர் திகழும்.

     (வி - ம்.) கண்ணருவி - மனத்தின் செய்கை. கைகூப்பித் தொழல் - உடம்பின் தொழில். வெள்ளமே, வெற்பே என வழுத்துதல் வாயின்செயல்.

(44)
பிள்ளைமதிச் செஞ்சடையான் பேசாப் பெருமையினான்
கள்ளவிழும் பூங்கொன்றைக் கண்ணியான் - உள்ளபடி
கல்லாலின் கீழிருந்து கற்பித்தான் ஓர்வசனம்
எல்லாரும் ஈடேற வே.
     (பொ - ள்.) ஆருயிர்களின் அடையாளமாகிய பிள்ளைப்பிறையினை வளர்மதியாகும் பொருட்டுச் சிவபெருமான் தன் திருச்சடையில் சூடியருளினன். அவன் நூல்களாற் பேசி வரையறுக்க முடியாத பெருமையினை யுடையவன். தேன் நிறைந்துள்ள கொன்றைமலர் மாலையினை அணிந்தவன்; இத்தகையான் மெய்ம்மையாகக் கல்லால மரத்தடியின்கண் வீற்றிருந்தருளி சிவனெனும் ஒப்பில் ஒருமொழியினைக் கற்பித்தருளினன். இவ்வருளிப்பாடு அனைத்துயிர்களும் ஈடேறும் பொருட்டேயாம்.

(45)
புலனைந்துந் தானே பொரமயங்கிச் சிந்தை
அலமந் துழலும் அடிமை - நலமிகுந்த
சித்தான மோன சிவனேநின் சேவடிக்கே
பித்தானால் உண்டோ பிறப்பு.
     (பொ - ள்.) நன்மை மிகுந்த பேரறிவான மோன நிலையினை உணர்த்தியருள எழுந்தருளிய சிவனே! ஐம் பொறிகளும் வலிய வந்து

 
 1. 
'அருணனிந்திரன்' 1. திருப்பள்ளி, 2.