பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

494

இருவினைப் பயனும், பிறப்பும், இறப்பும் பிறவும் அவர் தமக்கு உடன்பாடல்ல. கண்டதே காட்சி, கொண்டதே கோலம், உண்டதே யின்பம் என்பதே அவர் குறிக்கோள்.1

(2)
தீதெலாம் ஒன்றாம் வன்மை செறிந்திருட் படலம் போர்த்த
பாதகச் சிந்தை பெற்ற பதகனுன் பாத நீழல்
ஆதர வடைய உள்ளன் பருளகிலை யாயின் மற்றியார்
போதனை செய்ய வல்லார் பூரணா னந்த வாழ்வே.
     (பொ - ள்.) முழுநிறை வாழ்வே! தீவினைகள் அனைத்தும் ஒருங்கு சேர்ந்து வன்மை பொருந்தி, அறியாமையாகிய இருட்போர்வை பொலிவுற மூடப்பெற்ற பாவச்சிந்தையே உடைய கொடும் பாவியாகிய யான், உன்திருவடி நீழற் புகல் சேர மெய்யான உள்ளன்பினை2 நீ அடியேனுக்கு அருளாவிடில் மனமிரங்கிப் போதிக்கவல்லார் வேறு யாருளர்.

(3)
நாதனை நாதா தீத நண்பனை நடுவாய் நின்ற
நீதனைக் கலந்து நிற்க நெஞ்சமே நீவா என்றால்
வாதனை பெருக்கி என்னை வசஞ்செய்து மனந்துன் மார்க்க
போதனை செய்தல் நன்றோ பூரணா னந்த வாழ்வே
     (பொ - ள்.) முதல்வனாம் இறைவனை, முப்பத்தாறா மெய்யாகிய ஓசை எனப்படும் நாத தத்தவத்துக்கு அப்பாற்பட்ட ஆருயிர்க்கொரு துணைவனை, யாவர்க்கும் யாவைக்கும் நடுவாக நின்றருளும் அறமுறை செய் அந்தணனை, ஒன்றாய், வேறாய் உடனாய்ப் புணரும் மெய்ப்புணர்ப்பாய்க் கலந்து இன்புற்றிருக்க நெஞ்சமே நீ என்னுடன் கூடிவாவென்றால் (அதனை மறுத்து) பண்டைப் பயிற்சியையே பெருக்கி என்னையும் உன்வயப்படுத்துத் தீ நெறிப் போதனைகளைச் செய்தல் நன்றாமோ? ஆகாதென்க.) நிறையின்பப் பெருவாழ்வே.

(4)
எண்ணிய எண்ண மெல்லாம் இறப்புமேற் பிறப்புக் காசை
பண்ணிஎன் அறிவை எல்லாம் பாழக்கி எனைப்பா ழாக்குந்
திண்ணிய வினையைக் கொன்று சிறியனை உய்யக் கொண்டால்
புண்ணியம் நினக்கே யன்றோ பூரணா னந்த வாழ்வே.
     (பொ - ள்.) (அடியேன் நினைத்த நின்திருவடிக்கு மீளா நினைவையெல்லாம், கொடிய வினையானது) யான் நினைத்த நினைவனைத்தையும் இறப்புக்குமேல் பிறப்புக்கு விருப்பமுறும்படி செய்து என்னறிவையெல்லாம் பாழாக்கி என்னையும் பாழாக்கும் கடிய வினையைக் கெடுத்து ஏழையேனை உய்யுமாறு ஆட்கொண்டருளினால் புண்ணியம் நின்பாலதா மன்றோ? நிறையின்பப் பெருவாழ்வே.

     (வி - ம்.) வினைகடிந்தார் மெய்ம்மை வருமாறு :

 
 1. 
'ஊடுவ'. சிவஞானசித்தியார், பரபக்கம் - உல. 20  
 2. 
'இருளாய. சு. 54 - 4.