மண்ணும்விண்ணும் வந்து வணங்காவோ நின்னருளைக் | கண்ணுறவுட் கண்டவரைக் கண்டாற் பராபரமே. |
(பொ - ள்) நின்திருவடியினைத் திருவருட்டுணை கொண்டு கண்ணாரக் கண்டு உளமமைத்த மெய்யடியாரைக் காணநேரும் மெய்யன்பர் மண்ணுலகத்தாராயினும், விண்ணுலகத்தாராயினும் வணங்கி வழிபடா திருப்பரோ? வழிபடுவர் என்பதாம்.
(139)
என்றுங் கருணைபெற்ற இன்பத் தபோதனர்சொல் | சென்றசென்ற திக்கனைத்துஞ் செல்லும் பராபரமே. |
(பொ - ள்) எந்நாளினும் நின்திருவருளினை முற்றாகப் பெற்ற பேரின்பப் பெருந்தவத்தர் திருவருள் முனைப்பாற் சொல்லும் திருவாணைமொழி, செல்லும் செல்லும் திசையனைத்தினும் நன்கு சென்று பயன்தரும்.
(140)
ஆடுவதும் பாடுவதும் ஆனந்த மாகிநின்னைத் | தேடுவதும் நின்னடியார் செய்கை பராபரமே. |
(பொ - ள்) நின்மெய்யடியார்களின் செய்கை தன்னை மறந்து திருவருட் களிப்பு மிகுதியால் ஆடுவதும், அன்பு வடிவாய் நின்று அருந்தமிழ்ப்பாப் பாடுவதும், பேரின்ப நிலையமாக நின்று திருவூர்கடோறும் பதிநடை நடந்து நின்திருவடியினைத் தேடுவதும் ஆகும் என்ப.
(141)
பொங்கியநின் தண்ணருளைப் புட்கலமாப் பெற்றவர்கட் | கெங்கெழுந்தென் ஞாயி றியம்பாய் பராபரமே. |
(பொ - ள்) குறைவற நிறைந்து ததும்பி வழியும் தேவரீர் தண்ணருளை நிறைவாகப் பெற்ற மெய்யடியார்கட்கு நின்திருவடி நாட்டமல்லாமல் உலக நாட்டம் இன்மையால் ஞாயிறு கிழக்கேயல்லாமல் வேறு திசைகளில் தோன்றினாலும் 1 அதனால் அவர்களுக்கு நேரும் கவலை ஏதும் இல்லையன்றோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக.
புட்கலம் - நிறைவு.
(142)
பாலரொடு பேயர்பித்தர் பான்மையென நிற்பதுவே | சீலமிகு ஞானியர்தஞ் செய்கை பராபரமே. |
(பொ - ள்) திருவடியுணர்வு கைவரப்பெற்ற நன்னெறி நல்லார் பாலரைப் போன்றும், பேயரைப் போன்றும், பித்தரைப் போன்றும் நிற்பதுதான் நன்னெறியொழுக்கமிக்க சிவவுணர்வினர்க்குரிய திருப் பணியாகும்.
(வி - ம்) பாலர் பகுத்துணரும் தன்மையின்றிக் கண்ணிற்பட்ட வாறே கண்டு நிற்பர். பேயர் உண்டி, உறக்கம், அச்சம், உடனுறைவு
1. | 'உங்கையிற் பிள்ளை' 8. திருவெம்பாவை. 19. |
" | 'புண்ணியம்மேல்' சிவஞான சித்தியார், 8 - 2 - 21. |