ஆன புறவிக்கருவி ஆறுபத்தும் மற்றுளவும் | போனவழி யுங்கூடப் புல்முளைப்ப தெந்நாளோ. |
(பொ - ள்.) மெய்யெனப்படும் தத்துவங்களின் காரியமான தாத்துவிகங்கள் அறுபதும் புறக்கருவிகள் எனப்படும், தத்துவங்கள் முப்பத்தாறு எனப்படும். ஆகத் தொண்ணூற்றாறும் 1 எளியேனை விட்டுத் திருவருளால் போயொழியும் ஒழிந்தபின் அச் சுவடுந் தோன்றாவாறு போனஇடமும் புல்முளைப்ப தெந்நாளோ?
(வி - ம்.) தூமாயை மெய்கள் ஐந்து, தூவாமாயை மெய்கள் ஏழு, பகுதிமாயை மெய்கள் இருபத்துநான்கு ஆக மெய்கள் முப்பத்தாறு. பகுதிமெய், மூலப்பகுதி, புத்தி, அகங்காரம், மனம், தன்மாத்திரை ஐந்து, அறிதற்கருவி ஐந்து, செய்தற் கருவி ஐந்து, பூதம் ஐந்து ஆக இருபத்துநான்கு. இம் முப்பத்தாறும் மாயையின் ஆக்கமாகும். ஆக்கம் - காரியம், மெய் - தத்துவம், மெய்யாக்கம் - தாத்துவிகம்.
நிலம் : மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை - 5
நீர் : நீர், குருதி, மூளை, கொழுப்பு, வெண்ணீர் - 5
தீ :ஊண், உறக்கம், உட்கு, உடனுறைவு, மடி - 5
வளி : ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், தத்தல் - 5
வெளி :வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, பொறாமை - 5
செய்கருவி பேசல், நடத்தல், உழைத்தல், கழித்தல், மகப்பெறல். (5)
அறிவுவளி :உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று. 5
தொழில்வளி : தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று. 5
நாடி :இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, உள்நாக்கு நரம்பு, இடச் செவி நரம்பு, வலக்கண் நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு. (10)
ஓசை : நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை செவியோசை (4)
முப்பற்று : பொருட்பற்று, புதல்வர்ப்பற்று, உலகப்பற்று. 3
முக்குணம் : அமைதி, ஆட்சி, அழுந்தல். 3
ஆகத்தாத்துவிகம் அறுபது.
(15)
அந்தகனுக் கெங்கும்இரு ளானவா றாஅறிவில் | வந்தஇருள் வேலை வடியுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) குருடனுக்கு எக்காலத்தும் எல்லாவிடத்தும் இருளாகவே இருக்குந் தன்மை போன்று, அடியேனுக்கு ஆணவமலச் சார்பால்
1. | 'ஆகின்ற தொண்ணூறறோ', 10 |
2. | 'உன்னலரும்'. சிவப்பிரகாசம், 21. |