தக்கரவி கண்ட சரோருகம்போல் என்னிதயம் | மிக்கஅருள் கண்டு விகசிப்ப தெந்நாளோ. |
(பொ - ள்.) தனக்குத் தொடர்பாயுள்ள ஞாயிற்றினைக் கண்ட அளவானே தாமரையானது மலர்வது போன்று, அடியேனுடைய நெஞ்சத் தாமரையானது திருவருளைக் கண்டு மெய்யுணர்வு மிக்கோங்கி விளங்குவது எந்நாளோ? சரோருகம் - தாமரை.
(1)
வானமுகில் கண்ட மயூரபட்சி போலஐயன் | ஞானநடங் கண்டு நடிக்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) வானத்தின்கண் காணப்படும் மேகத்தினைக் கண்ட மயிற்பறவைகள் களிப்பு மிகுதியால் தோகையினை விரித்தாடுவது போன்று அடியேனும் திருச்சிற்றம்பலத்தின்கண் கூத்தப் பெருமான் புரிந்தருளும் பேரறிவுப் பெருங்கூத்தினைத் திருவருளால் கண்டுகளித்து இன்பக் கூத்தாடும் 1 நாள் எந்நாளோ? மயூரம் - மாயூரம் - மயில்.
(2)
சந்திரனை நாடுஞ் சகோரபட்சி போல்அறிவில் | வந்தபரஞ் சோதியையான் வாஞ்சிப்ப தெந்நாளோ. |
(பொ - ள்.) தண்கதிர் பரப்பும் திங்களை எப்பொழுதும் நாடிக் கொண்டிருக்கும் நிலாமுகிப்புள்ளினைப் போன்று அடியேனுடைய அறிவின்கண்ணே தோன்றிய மேலாந்திருவருட் பேரொளியினை எளியேம் காதல்கொள்வது எந்நாளோ? சகோரப்பறவை - நிலா முகிப்புள்.
(3)
குத்திரமெய்ப் புற்றகத்துக் குண்டலிப்பாம் பொன்றாட்டுஞ் | சித்தனைஎன் கண்ணால் தரிசிப்ப தெந்நாளோ. |
(பொ - ள்.) வஞ்சகமே 2 வடிவாகிய இவ்வுடம்பென்னும் புற்றின் கண்ணே மூலத்திடத்துப் பாம்புபோல் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் பொருளுணர்த்தும் எழுத்தோசை எனப்படும் ஒலி (நாதம்) யாற்றல் குண்டலிசத்தி எனப்படும். அதனைப் பாம்பென 3 உருவகம் செய்வர். அப் பாம்பினை ஆட்டியருளுகின்ற சித்தப்பெருமானை எளியேன் கண்ணினால் கண்டு வழிபடுவ தெந்நாளோ? குத்திரம் - வஞ்சகம்.
(4)
அந்தரத்தே நின்றாடும் ஆனந்தக் கூத்தனுக்கென் | சிந்தை திறைகொடுத்துச் சேவிப்ப தெந்நாளோ. |
(பொ - ள்.) திருச்சிற்றம்பல மென்னும் அறிவருட் பெருவெளியில் இடையறாது நின்றாடியருளும் பேரின்பப் பெருங்கூத்து
1. | 'ஆடுகின்றிலை'. 8. திருச்சதகம், 31. |
2. | 'மாறிநின்றென்னை', 8. கோயிற்றிருப்பதிகம், 1. |
3. | 'சூக்குமவாக', 1. சிவஞான சித்தியார், 1. 1 - 22. |