முடங்கிக்கிடப்ப அடியேன் பிறவிப்பெரும் பிணியினின்றும் நீங்குவது எந்நாளோ?
(15)
கற்குணத்தைப் போன்றவஞ்சக் காரர்கள்கை கோவாமல் | நற்குணத்தார் கைகோத்து நான்திரிவ தெந்நாளோ. |
(பொ - ள்.) கல்லின் தன்மை போன்ற, முப்பொருளுண்மை தேராத கொடிய வஞ்சகருடைய கையினைக் கோத்துத் திரியாமல், நின் திருவடிப் பேற்றுப் பத்தியுடைய நற்பண்பு வாய்ந்த நல்லார்தம் கைகோத்து நான்வருவ தெந்நாளோ?
(16)
துட்டனைமா மாயைச் சுழல்நீக்கி அந்தரமே | விட்டனையோ என்று வியக்குநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) பொல்லாங்கு மிக்க ஏழையேனைப் பெரிய மாயாகாரியச் சூழலினின்றுத் திருவருளால் நீக்கித் திருவருட் பெருவெளியாம் மேனிலைக்கண்ணே விடுத்தருளினையோ என்று வியக்குநாள் எந்நாளோ?
(17)
அத்துவா எல்லாம் அடங்கச்சோ தித்தபடிச் | சித்துருவாய் நின்றார் தெளிவறிவ தெந்நாளோ. |
(பொ - ள்.) இருவினைக்கட்டுகள் தங்கி வருவழி ஆறென்பர். இவை ஆறத்துவா என்று வழங்கப்பெறும். இவ்வத்துவாக்கள் முற்றினையும் மெய்யுணர்வுக் குருவானவர் சிவதீக்கை செய்தருளுங்கால் நன்றாகச் சோதித்து மூதறிவு வண்ணமாய் நிற்கச் செய்வர். அங்ஙனம் நின்ற செம்பொருட்டுணிவினர்தம் தெளிவினை அடியேனறிவது எந்நாளோ?
(வி - ம்.) அத்துவா சொல்லும் பொருளுமென இருவகைப்படும் சொல்வழி மூன்று. அவை : மந்திரம், பதம், வன்னம் என்பன. பொருள்வழி மூன்று. அவை, பவனம், தத்துவம், கலை என்பன. மந்திரம் - 11, பதம் - 81, வன்னம் - 51, புவனம் - 224, தத்துவம் - 96, கலை - 5. 1
(1)
மூச்சற்றுச் சிந்தை முயற்சியற்று மூதறிவாய்ப் | பேச்சற்றோர் பெற்றஒன்றைப் பெற்றிடுநாள் எந்நாளோ. |
(பொ - ள்.) அகத்தவமாம் உயிர்ப்புப் பழக்கத்தால் உயிர்மூச்சினை அடக்கி, மனநினைவுமற்று மூதறிவாகிய திருவடியுணர்வால் மவுனநிலை யடைந்தோர் அடைந்த ஒப்பற்ற திருவடிப் பேற்றினை அடியேன் அடையுநாள் எந்நாளோ?
(2)
கோட்டாலை யான குணமிறந்த நிர்க்குணத்தோர் | தேட்டாலே தேடுபொருள் சேருநாள் எந்நாளோ. |
1. | 'விரும்பியமந', சிவப்பிரகாசம், 9. |