பக்கம் எண் :

New Page 1

100

             காப்புப் பருவம்

கொண்டு அரசு புரிந்து தல யாத்திரை புரிந்து இறைவனடி கலந்தனர்.

    அடை எய்தாது குறிப்பிடப்பட்டவர் சாக்கியர்.  திருத் தொண்டத் தொகையில் சாக்கியர் என்று குறிப்பிட்ட இடத்து ‘ அடையின்றிச் சாக்கியர்’ என வாளாக் குறிப்பிடப்பட்டிருத்தலை உணரவும்.  ஈண்டு ஓர் ஆசங்கை எழக்கூடும்.  அதாவது திருத்தொண்டத் தொகைப் பாடலில், “ வார் கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த” என்னும் அடை சாக்கியர்க்கு முன் இருக்கின்றதே, அங்ஙனம் இருக்க.  “அடையிலது” எனல் பொருத்தமோ” என்பது.  அத்தொடர் அடை அன்று.  அது சாக்கியர்தம்   திருத்தொண்டின்   வரலாற்றுக்   குறிப்பாகும்.   சாக்கியார்   வரலாறு முதலிலேயே கூறப்பட்டது.

    இனிய நகர் எனும் அடை ஏற்று நின்றவர்கள் இருவர்.  அவர்களில் ஒருவர் சிறுத்தொண்டர்.  அவர் “செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்” எனப்பட்டார்.  மற்றொருவராகிய கணநாதர் “கடல் காழி கணநாதர்” என்று குறிக்கப்பட்டார்.  இவ்வடைகள் முறையே திருத்தொண்டத் தொகைப் பாடலில் இருப்பதைக் காண்க.

    சிறுத்தொண்டர் சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் மாமாத்தியர் குடியில் பரஞ்சோதியார் என்னும் பெயருடன் தோன்றியவர்.  இவர் வடமொழிபயின்றவர்.  ஆயுர்வேதக் கலையும் நன்கு உணர்ந்தவர்.  இவர் நந்திவர்ம பல்லவனிடம் சேனைத் தலைவர் பதவியினையும் ஏற்றவர்.  அரசர்க்கு வெற்றி பல தந்தவர்.  இதனைச் சேக்கிழார்,

        ஈசன்அடி யார்க்கென்றும்
            இயல்பான பணிசெய்தே
        ஆசில்புகழ் மன்னவன்பால்
            அணுக்கராய் அவற்காகப்