பூசல
பூசல்முனைக் களிறுகைத்துப்
போர்வென்று
பொரும்அரசர்
தேசங்கள் பலகொண்டு
தேர்வேந்தன்
பால்சிறந்தார்
என்று
குறிப்பிடுகிறார்.
ஈண்டு “மன்னவன்”
என்பது நரசிம்மவர்ம பல்லவன். இவனிடமே சிறுத்தொண்டர் படைத் தலைவராக இலங்கியவர்.
இதனைக் கல்வெட்டுக்கள் மூலமும், வரலாற்று மூலமும் அறியலாம். இங்ஙனம் இருக்கத் திரு. வி. கலியாணசுந்தர
முதலியார் அவர்கள் “சோழ மன்னனிடம் அமைச்சராய் இருத்தவர்” என்று எழுதி இருப்பது ஆய்தற்குரியது.
சேக்கிழார் வாக்கில் “மன்னவன்பால் அணுக்கராய்” என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது. “அமைச்சராய்”
என்னும் சொல் காணப்பட்டிலது. ஆனால், திரு. வி. க. அவர்கள் சிறுத்தொண்டர் சோழ மன்னன்பால்
அமைச்சராய் இருந்து கடனாற்றி வந்தார் என்று எழுதியிருப்பது பற்றியும் நாம் ஆயவேண்டியனராய் உள்ளோம்.
மாமாத்திரர் மரபினர் சிறுத்தொண்டர் என அறிந்தோம். மாமாத்திரர் என்பவர் அரசியல்,மந்திராலோசனைச்
சபையினர். அப்பொருள் கொண்டு அமைச்சர் என்றனர் போலும்.
சிறுத்தொண்டராம்
பரஞ்சோதியார் வாதாபி மன்னனாம் புலிகேசியுடன் பல்லவர் பொருட்டுப் போரிட்டு அவரை வென்றவர்.
இவ்வெற்றி பற்றிச் சாளுக்கிய பட்டயமும் பகர்ந்து கொண்டிருக்கிறது. மன்னன் பின்னால் தம்
படைத் தலைவர் சிவனடியார் என்பதை அறிந்து, அவரைப் படைத் தலைவர் பதவியிலிருந்து அன்புடன்
விடுதலை புரிந்து, அவர் தம் சிவனடியார் பணி சிறப்புடன் நடக்கப் பொருளையும் ஈந்தனன். இவர்
திருவெண்காட்டு நங்கையாருடன் இல்லறம் நடத்திச் சீராளதேவன் என்னும் பிள்ளையையும் பெற்று, திருக்கணபதீச்சுரப்
பெருமானிடம் பேரன்பு கொண்டு, சிவனடியார்கட்கு முன்னர் அன்னம் அளித்துப் பின்னர் உண்ணும்
கடப்பாட்டில் ஒழுகினார்.
|