| 
கண
 
     கண்ணப்பர்   
 “ கணைகொள் கண்ணப்பன் “       “இடந்த கண்ணப்பன் “  எனப்பட்டார்.  இவற்றால் 
கண்ணை இடந்து கடவுளுக்கு அப்பியவர் என்பது தெரிகிறது. 
    கோச்செங்கட்சோழரை 
  
 தெருண்ட வாயிடைநூல் 
கொண்டு சிலந்தி 
        சித்திரப்பந்தர் 
சிக்கென இயற்றச் 
    சுருண்ட செஞ்சடையாய்அது 
தன்னைச் 
        சோழனாக்கிய தொடர்ச்சி 
கண்டடியேன் 
என்றும்  “ கோச்செங்கணான் 
செய்கோயில் “  என்றும் 
 
   
திருவும் வண்மையும் 
திண்திறல் அரசும் சிலந்தியார்  
    செய்த செய்பணி கண்டு 
என்றும் பாடி அவர் முன் 
பிறவியில் சிலந்தியாக இருந்து இறைவர்க்குத் தம் வாய் நூலால் பந்தர் இட்ட தொண்டின் சிறப்பால் 
சோழர் குலத்தில் பிறந்து அரசேற்றதையும், கோயில் கட்டியதையும் குறிப்பிட்டனர். 
     ஏயர்கோனார்
உற்ற நோயைப் போக்கியதையும், அவர் பன்னிருவேலி பெற்றிருந்தமையினையும் பாராட்டி  “ ஏதநன்னிலம் 
ஈரறுவேலி ஏயர் கோன் உற்ற இரும்பிணி தவிர்த்து “  என்று பாடி அறிவித்துள்ளனர். 
     நரசிங்கமுனை 
அரையரைப்பற்றி நாவலூர் ஈசனுகுத் தொண்டு செய்பவர்,  திருநாவலூர் மன்னர் என்ற 
குறிப்புக்களை  “ நரசிங்கமுணையரையர் ஆதரித்து ஈசனுக்காட்செயும் ஊர் அணி நாவலூர் “ என்று 
பாடியுள்ளனர். 
    கணம்புல்லர், திருநாளைப் 
போவார், மூர்க்கர், சாக்கியர் ஆகிய இவர்களைப் பெயர் அளவில் குறிப்பிட்டுச் சென்றுளார். 
 ஆகவே, சுந்தரரால் பதின் மூன்று நாயன்மார்கள் தனித்த முறையில் குறிக்கப் பெற்றனர் என்பதையும் 
அறிகிறோம். 
    இவ்வளவே நாயன்மாரைப் 
பற்றி நாம் அறிவன.  நாயன்மார்களைப் பற்றிய குறிப்புக்களை மூவர் பாடிய 
 |