| 
New Page 1
 
        பொற்பமைந்த 
அரவாரும் 
            புரிசடையார் 
தமைஅல்லாச் 
        சொற்பதங்கள் 
வாய்திறவாத் 
            தொண்டுநெறித் 
தலைநின்ற 
        பெற்றியினில் 
மெய்அடிமை 
            யுடையாராம் 
பெரும்புலவர் 
        மற்றவர்தம் 
பெருமையார் 
            அறிந்துரைக்க 
வல்லார்கள் 
என்பன. 
    மூன்றாவது பாடலில்  
 “ ஆங்கவர்தம் அடிஇணைகள் தலைமேற்கொண்டு “   என்ற அளவில் கூறி, ஏனையமூன்று அடிகளில் அடுத்துச் 
சொல்லப்போகும் புகழ்ச் சோழரைப் பற்றி அறிவித்தனர்.  பொய்யடிமை இல்லாத புலவர் புராணத்திற்கு 
முன் உள்ள கூற்றுவ நாயனார் புராணத்தின் ஈற்றுப் பாடலுக்கு முன் உள்ள பாடலின் ஈற்று இரண்டடிகளில், 
பொய்யடிமை இல்லாத புலவர் பற்றிய குறிப்பினையும் சேக்கிழார் தருகிறார்.  அவ்வடிகள், 
        நாத மறைதந் 
தளித்தாரை 
            நடைநூல் 
பாவில் நவின்றேத்துப் 
        போதம் 
மருவிப் பொய்அடிமை 
            இல்லாப் 
புலவர் செயல்புகல்வாம் 
என்பன. 
    இங்கு எடுத்துக் 
காட்டப்பட்ட நான்கு  பாடல்களின்  போக்கை  நன்கு   சிந்தித்தல் வேண்டும்.  முதலாவதாகச் சேக்கிழார் 
வாக்கில் மதுரையைப்பற்றிய குறிப்புக் காணப்படவில்லை.  இரண்டாவதாகச் சங்கப் புலவர்கள் என்ற 
குறிப்பும் காணப்படவில்லை.  மூன்றாவதாக, கபிலர், பரணர், நக்கீரர் என்னும் புலவர்களின் பெயர்களும் 
அறிவிக்கப்படவில்லை.  நான்காவதாகச் சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மர் என்னும் தொகைக் 
குறிப்பும் காணப்படவில்லை.  ஆனால், நான்கு பாடல்களில் சிவபெருமானையே பாடிய புலவர் என்னும் 
குறிப்பு வெளிப்படையாகக் காணக் கிடைக்கிறது.  நம்பி 
 |