New Page 1
எண்ணெய்
விற்பதும் நின்றது. மனைவியாரை விற்க எண்ணி விலை கூறினார். வாங்குவார் இல்லை. மனம்
தளர்ந்தார். கோவிலுக்குள் சென்றார். அகல்களைப் பரப்பித் தம் செந்நீரையாகிலும் எண்ணெயாக
ஊற்றி விளக்கெரிக்கலாம் எனத் தம் கழுத்தை அரிய முயன்றார். சிவபெருமான் அந்நிலையில் கையைப்
பிடித்துக் காட்சி தந்தார்.
சத்தி நாயனார் : இவர் சோழ நாட்டில், வரிஞ்சையூரில் வேளாளர் மரபில் பிறந்தவர். சிவனடியாரை
இகழ்வோர் நாவை அறுத்து வந்தவர்.
ஐயடிகள் காடவர் கோன்நாயனார் : இவர் பல்லவ மரபினர். காஞ்சியில் பிறந்தவர். எல்லா
உயிர்களும் இன்புற வேண்டும் என்னும் எண்ணமிக்கவர். பல நாடுகளை வென்று வாழ்க்கையினை வெறுத்துத்
தம் மகனுக்கு முடிசூட்டித் தலை யாத்திரை செய்து, அதன் பயனாக க்ஷேத்திர வெண்பா என்னும் நூலைப்
பாடியவர்.
பொய்யடிமை இல்லாத புலவர், “செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல்பல நோக்கும் மெய்யுணர்வின்
பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர் மையணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானார் “ ஆதலாலும்,
புகழ்ச் சோழர் அமைச்சர் கொணர்ந்த தலையில் சடைத் தலை இருக்கக் கண்டு நடுங்கி மனம் கலங்கிக்
கை தொழுது கொண்டு பெரும் பயத்துடன்,
கண்டசடைச்
சிரத்தினையோர்
கனகமணிக் கலத்தேந்திக்
கொண்டுதிரு முடித்தாங்கிக்
குலவுஎரி வலங்கொள்வார்
அண்டர்பிரான்
திருநாமத்
தஞ்செழுத்தும் எடுத்தோதி
மண்டுதழல்
பிழம்பினிடை
மகிழ்ந்தருளி உள்புக்கார்
ஆதலாலும், நரசிங்கமுனை
அரையர் திருநீறு பூசியவர்கள்,
|