| 
New Page 1
 
கிழார் பெருமானார் சந்திரன் மேகத்தில் நுழைவதை உவமை காட்டியுள்ள இடத்தையும் அறிந்து இன்புறுவோமாக.  
அது, 
     
“ முகில்நுழை மதியம்போலக் கைவலான் முன்கை  
                                         சூழ்ந்த 
    
துகில்கொடு குஞ்சிஈரம் புலர்த்தி “  
என்பது. 
    
பணியாளன் 
வெள்ளாடை கொண்டு சுந்தரரது தலைமயிரின் ஈரத்தை அப்பி அப்பி எடுத்தது, சந்திரன் மேகத்திடையே 
புகுந்து வருவது போன்றதாகும் என்பது இவ்வடிகளின் பொருள்.  ஆற்றில் ஆடவரும் பெண்டிரும் நீராடல் 
நம் நாட்டு வழக்கம்.  இதனைச் சுந்தரர், 
“ உடைஅவிழக் 
குழல்அவிழக் கோதைகுடைந் தாடக் 
குங்குமங்கள் 
உந்திவரும் கொள்ளிடம் “  
என்று பாடிக் 
காட்டுதலைக் காண்க. 
    
பாலாறு 
பெருக்கெடுத்து வருவதைச் சேக்கிழார், 
        துங்க மாதவன் 
சுரபியின் 
            திருமுலை 
சொரிபால் 
        பொங்கு தீர்த்தமாய் நந்திமால் 
            வரைமிசைப் 
போந்தே 
        அங்கண் 
நித்திலம் சந்தனம் 
            அகிலொடு 
மணிகள் 
        பங்க யத்தடம் 
நிறைப்பவந் 
            திழிவது 
பாலி 
        பிள்ளை 
தைவரப் பெருகுபால் 
            சொரிமுலைத் தாய்போல் 
        மள்ளர் 
வேனிலின் மணல்திடர் 
            பிசைந்து 
கைவருட 
        வெள்ள நீர்இரு மருங்குகால் 
            வழிமிதந் 
தேறிப் 
        பள்ள நீள்வயல் 
பருமடை 
            உடைப்பது 
பாலி 
 |