New Page 1
சம்பந்தரால்
சைவரானவர். வடபுல மன்னரைத் திருநெல்வேலியில் வென்றவர்.
வாயிலார்
திருமயிலையினர். வேளாளர் மரபினர். உள்ளக் கோயில் அமைத்து அறிவு விளக்கேற்றி ஆனந்த
நீராட்டி அன்பை நிவேதனம் செய்தவர்.
முனையடுவார்
சோழ நாட்டுத்
திருநீடூரின் வேளாளர். போர் வீரர் பகைவர்க்குப் பயந்தவர்கள் இவரின் துணை பெறுவர். இவ்வாறு
உதவிபுரிந்து அதனால் வரும் பொருளால் அடியார்கட்கு அமுது படைப்பர். அவர்கள் விரும்புவனவற்றைச்
செய்வர்.
இவ்
ஐவரையும் இறைவர், மிகுதியும் விரும்பினர் என்பதை திரு பிள்ளை அவர்கள் “முதல் அமர்ந்த“ என்ற
தொடரில் கூறியுள்ளனர். முதல் என்பவர் முன்னைப்பழம் பொருட்கும், முன்னைப் பழம் பொருளான
இறைவர். எல்லார்க்கும் முன்னே தோன்றியவர்களுள் முதன்மையான முழு முதற் பொருள். அமர்ந்த
என்பது விரும்பி என்னும் பொருட்டு.
இறைவன்,
ஆன்மாக்களை ஆக்கி, அளித்து, அழித்து, மறைத்து, அருளிவருதலின் ஐந்ததிகாரி எனப்பட்டான்.
இறைவன் இவ்வைந்து தொழிற்கும் அதிகாரி என்பதை மணிமொழியார்,
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லாஉயிர்க்கும் ஈறாம் இணைஅடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்
என்று கூறுதல்
காண்க.
|