பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

157

    இறைவன் இவ்வைந்தொழிற்களைத் தானே செய்வதோடின்றி, இத்தொழிற்களைச் செய்யும் அதிதேவர்களையும் அமைத்து, அவ்வத்தொழிலைச் செய்யுமாறு ஏவித் தான் மேல் ஓர் அதிகாரியாகவும் நிற்கின்றான் என்பதைப் பிரபுலிங்க லீலை,

ஆக்குறும் செயல தொன்றே அயன்தனக் காக்க லோடு
காக்குறும் செயல் இரண்டும் கண்ணனுக் காக்கல் காத்தல்
போக்குதல் என்றிம் மூன்றும் புராந்தகற் களித்த வர்க்கு
நீக்கரும் இறைமை நல்கி நிறுவினன் குருகு கேசன்

என்று கூறுகிறது.

    மகேஸ்வரன் சதாசிவன் ஆகிய இருவர் பற்றி இப்பாடலில் குறிப்பு இல்லை ஆயினும் இனப் பற்றி அவர்களையும் இணைத்து உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

    இறைவன் மலைமங்கையைத் தன்பால் கொண்டிருந்தாலும், அவன் காமவிகாரி அல்லன்.  இதனை ரதி நன்கு வெளிப்படுத்தித் தன் கணவனான மன்மதன் இறந்தபோது புலம்பிய புலப்பலுள் விளக்கியுள்ளனள்.

        நேயமொடு மறைபயிலிலும் திசைமுகனைப்
           
புரந்தரனை நின்னைத் தந்த
       
மாயவனை முனிவர்களை யாவரையும்
           
நின்கணையால் மருட்டி வென்றாய்
       
ஆயதுபோல் மதிமுடித்த பரமனையும்
           
நினைந்திவ்வா றழிவுற் றாயே
       
தீயழலின் விளக்கத்தின் படுகின்ற
           
பதங்கத்தின் செயலி தன்றோ

என்ற பாடலைக் காண்க.

    மன்மதனும் தான் இறப்பதற்கு முன் தேவர்களிடம் இறைவன் மையலுக்கு உள்படாதவன் என்பதை,