வழ
வழிபடுவர். ஒரு முறை
இவர் தம் மனைவியார் திருவாரூர் கோவிலை வலம் வருகையில், இறைவர்க்குரிய மலரை எடுத்து மோந்துவிட்டனர்.
இதை அறிந்த கழற்சிங்கர் தம் மனைவியார் கையைத் துண்டித்து விட்டனர். இச்செயலைக் கண்ட
இறைவர் இவர்க்கு நல்லருள் புரிந்தார்.
இவரது வரலாற்றில்
அறச் செயல்கள் காணப்படுகின்றன. இவர் சிவரெுமானை அன்றி வேறு எவரையும் தம் அறிவில் கொண்டிலர்.
இதனைச் சேக்கிழார், “ கங்கைவார் சடையார் செய்ய அடிமலர் அன்றி வேறொன்றறிவினில்
குறியா நீர்மை “ என்று குறிப்பிட்டுள்ளார். இவரது ஆட்சியில் நாடு அறநெறியில் சென்றது.
இதனையும் சேக்கிழார், ”நாடற நெறியில் வைக நன்னெறி வளர்க்கும் நாளில் “ என்று வகுத்து
மொழிந்துள்ளனர். இவர் தவயாத்திரை மேற்கொண்டவர். இச்செய்தியைப் பெரிய புராணம், “ குவலயத்து
அரனார்மேவும் கோயில்கள் பலவும் சென்று தவலரும் அன்பில் தாழ்ந்து தக்கமெய்த் தொண்டு செய்வார் “
என்கிறது. இந்நாயனார் தம் மனைவியார் இறைவர்க்குரிய மலரை எடுத்து மோந்தது பற்றித் தம்
உடைவாளால் மலரை எடுத்த கையை வெட்டி எறிந்தனர். இதனையும் திருத்தொண்டார் புராணம்
குறிப்பிடும்போது,
கட்டிய
உடைவாள் தன்னை
உருவிக் கமழ்வா சப்பூத்
தொட்டுமுன்
எடுத்த கையாம்
முற்படத்
துணிப்ப தென்று
பட்டமும்
அணிந்து காதல்
பயில்பெருந்
தேவி ஆனா
மட்டவிழ்
குழலாள் செங்கை
வளையொடும்
துணித்தார் அன்றே
என்று பாடிக் காட்டியுள்ளது.
இவ்வாறு நாயனார்
எல்லாப்படியாலும் அறநெறி மனத்துடன் வாழ்ந்தவர் ஆதலின், “அறம் சூழ்ந்த நெஞ்சக்
|