New Page 1
“ஓர் இகழ்த்துணை பெறாதுற
விளங்கும் “ என்று பாடிக் காட்டினர். இவர் இதழ்தற்குரியர் ஆயின், சுந்தரர் இவரது சிறப்பைப்
பாடி இரார். இறைவரும் கனவில், “ அருந்துணவு மங்கியநாள் கழிஅளவும் வைப்பது நித்தமும் ஒரு
காசு இங்கு உனக்கு நாம் “ என்று அருள் செய்திரார்.
இந்நாயனார்,
“அரில்விடல் சூழ்ந்த சிந்தையும், ஓர் இகழ்த்துணை பெறாது உறவிளங்கம் “ தன்மையும் பெற்றதனால்தான்,
மாயனுக் கரியானை
மஞ்சனம்ஆட் டும்பொழுது
சாலவுறு பசிப்பிணியால்
வருந்திநிலை தளர்வெய்திக்
கோலநிலை புனல்தாங்கு
குடந்தாங்க மாட்டாமை
ஆயமணி கண்டத்தார்
முடிமீது வீழ்த்தயர்வார்
ஆயினார்.
இவரை மேலும், “ உறவிளங்கும் “ என்று
புகழ்ந்ததன் காரணம், சேக்கிழார், “எங்கும் நிகழ்ந்த புகழ்துணை“ என்றும், “ ஒருவர் தமை நிகர்இல்லார்
உலகத்துப் பரந்தோங்கிப் பொருவரிய புகழ்நீடு புகழ்ந்துணையார் “ என்றும் கூறியிருத்தலால் என்க.
கோட்புலியார் :
இவர் சோழ நாட்டில் நாட்டியத்தான் குடியில் வேளாள மரபில் பிறந்தனர். சோழனிடம் சேனாதிபதி
தொழிலை மேற்கொண்டவர். மாற்றாரை வென்றவர். தம் தொழிலால் வரும் ஊதியத்தை இறைவர்க்குத்
திருவமுது படைத்து வழிபட நெற்களை வாங்கிக் குவித்தவர். ஒரு முறை இவர் வேற்று நாடு சென்று
போர்புரிய நேர்ந்தது. அது போது அவர்தம் சுற்றத்தாரிடம் “ இந் நெற் குவியல்கள் இறைவர்க்குத்
திருஅமுதுக்கெனச் சேர்க்கப்பட்டமையின், எக்காரணம் கொண்டும் நீங்கள் பயன் படுத்தக் கூடா “ தென
ஆணை இட்டுச் சென்றனர். ஆனால், நாட்டில் பஞ்சம் வரச் சுற்றத்தார் தமக்குப் பயன்படுத்திக்
கொண்டனர். கோட்புலியார் வெற்றியுடன் திரும்பினார். சுற்றத்தார் செயலை அறிந்தார்.
வீட்டில் புகுந்தார். தம் சேவகனை வாயில் காவலில் காவல் புரியக் கட்டளை இட்டார். அடாது
செய்த
|